Pages

Thursday, January 10, 2013

பள்ளிகளில் மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, மாணவியரை பத்திரமாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

டில்லியில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவி இறந்த சம்பவத்துக்கு பின், தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவியர் உட்பட்ட, பெண்கள் அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பள்ளிகளில் நடைபெற்று வரும் மாலை நேர சிறப்பு
வகுப்புகளும், கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு:பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2பொதுத்தேர்வுக்கு, மாணவ, மாணவியரை தயார் செய்ய, காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு வகுப்புகளை பள்ளிகள் நடத்துகின்றன. சில பள்ளிகளில், இரவு, 8:00 மணி வரை கூட, சிறப்பு வகுப்புகள் நடப்பதாக தகவல் வந்துள்ளது.

பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதி கருதி, மாலை நேர சிறப்பு வகுப்புகளை, 5:00 மணிக்குள் முடித்து, அவர்களின் இருப்பிடங்களுக்கு பத்திரமாக அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் வாயிலாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள், தனியார் பள்ளி முதல்வர்களுக்கு, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.