Pages

Sunday, January 27, 2013

பள்ளி மாணவர்கள் 36 ஆண்டுக்குப் பின் சந்திப்பு: ராமேஸ்வரத்தில் நெகிழ்ச்சி

ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 36 ஆண்டுகளுக்கு முன் பத்தாம் வகுப்பு படித்த பழைய மாணவர்கள், குடும்பத்தோடு ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இப்பள்ளியில், 1976-77ம் ஆண்டில், பத்தாம் வகுப்பில் 118 பேர் படித்தனர். இவர்களில் பலர் உள்ளூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் தாங்கள் படித்த பள்ளி, நண்பர்களை மறக்காமல் 36 ஆண்டுகளுக்கு பின், ராமேஸ்வரத்தில் குடும்பத்தோடு சந்தித்தனர்.

பின்னர், குடும்ப உறவினர்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒருவொருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை தெரிவித்தனர். பழைய மாணவர் குழு தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:

உடன் படித்த சிலரின் விலாசம் மட்டுமே இருந்தது. அதனை கொண்டு, மற்றவர்களை பற்றிய விபரங்களை சேகரித்தேன். அப்போது, படித்த 118 பேரில் 90க்கும் அதிகமானவர்களின் முகவரிகளை சேகரித்தேன். அதுமட்டுமின்றி, அனைவரும் படித்த பள்ளியில் குடும்பத்தோடு தங்களது மலரும்...நினைவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டுமென முடிவு செய்தனர்.

இதற்கு அனைவரும் ஒப்புக்கொண்டனர். அனைவரும் குடியரசு தினவிழாவில் பள்ளியில் ஒன்றுகூடுவது என, முடிவு செய்தோம். அதன்படி நேற்று, 86 பேர் குடும்பத்தோடு பள்ளியில் சங்மித்து பழைய நினைவுகளை நினைவு கூர்ந்ததோம்.

விமான படை, சுங்கத்துறை, வருவாய்த்துறை, ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் உள்ளனர். 36 ஆண்டுக்கு பின், இப்படி சந்திப்போம் என நினைத்து கூட பார்க்கவில்லை. மேலும், படித்த பள்ளிக்கு பெருமை சேர்க்கும் வகையில், இன்வெட்டர், புத்தகங்கள் வாங்குவதற்கு 60 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கவுள்ளோம்.

2014ம் ஆண்டில், நடக்கவுள்ள பள்ளி பவள விழாவில், இதேபோல் அனைத்து முன்னாள் மாணவர்களும் சந்திக்க இப்போதே திட்டமிட்டுள்ளோம் என, மகிழ்ச்சியுடன் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.