Pages

Tuesday, January 22, 2013

ஜன.30-ல் ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம்: தலைமை ஆசிரியர்கள் முடிவு

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரகம் முன்பு ஜனவரி 30-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கழகம் முடிவு செய்துள்ளது. திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த கழகத்தின் மாநிலப்
பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: பள்ளிக் கல்வித் துறையில் தகுதி மற்றும் பணிமூப்பு புறக்கணிக்கப்பட்டு முதுநிலை ஆசிரியர்களாகப் பணியில் சேர்ந்தவர்கள் இன்று மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் டி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பொதுச் செயலர் வா. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினார். மாநிலப் பொருளாளர் சே. ராஜபாண்டியன், அமைப்புச் செயலர் மு. பொன்முடி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.