சென்னை பல்கலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள், இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது. சென்னை பல்கலையில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.காம்., - எம்.ஏ., உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்பு பயில்வோருக்கு, கடந்த ஆண்டு, நவம்பரில், தேர்வு நடந்தது.
இத்தேர்வு முடிவுகள், www.unom.ac.in, www.kalvimalar.com, www.examresults.net, உள்ளிட்ட இணையதளங்களில், நாளை வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை, எஸ்.எம்.எஸ்., மூலம் பெறுவது, தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு உள்ளிட்டவை குறித்த விவரங்களை, பல்கலை இணையதளத்தில் பெறலாம். சென்னை பல்கலை, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.