Pages

Saturday, January 26, 2013

மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு ஜன.28க்குள் விபரங்கள் பதிய நடவடிக்கை

பள்ளி மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. அவர்கள் பற்றிய விபரங்களை ஜன.28க்குள் பதிய வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் தூத்துக்குடி விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
தூத்துக்குடி கல்வி மாவட்ட அலுவலர் ரத் தினம், கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தில் உள்ள 80 அரசு பள்ளிகள், 135 தனியார் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கலந்து கொண் டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெய கண்ணு தலைமை வகித்து பேசுகையில், ‘அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்திருக்க வேண்டும். வருகிற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி அரசு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண் டும். மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப் பட உள்ளது. அவர்கள் பற் றிய விவரங் களை உடனடி யாக இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இப்பணிகளை வரும் 28ம் தேதிக்குள் முடிக்க வேண் டும். பள்ளிகளில் குடியரசு தின விழா வை சிறந்த முறையில் நடத்த வேண்டும். இன்று (25ம் தேதி) தேசிய வாக் காளர் தினம் கடை
பிடிக்கப்படுகிறது. இதை பள்ளிகளில் பல்வேறு போட்டிகள் நடத்தி கொண் டாட வேண்டும்‘ என்றார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் குமார தாஸ், ஆபிரகாம், பள்ளி துணை ஆய்வாளர் சங்கரய்யா, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட அலுவலர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.