தமிழகத்தில், இந்த நிதியாண்டில், 16 பள்ளி விடுதிகள், எட்டு கல்லூரி விடுதிகள், ஒரு, ஐ.டி.ஐ., விடுதி என, 25 புதிய விடுதிகள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ், 1,277 ஆதி திராவிடர் நல விடுதிகள், 40 பழங்குடியினர் நல விடுதிகள், 299 பழங்குடியினர், உண்டி உறைவிட பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
தற்போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின குழந்தைகள் அதிகளவில் கல்வி கற்க முன் வருவதாலும், இடை நிற்றல் குறைந்து வருவதாலும், மாணவ, மாணவியர் தங்கி படிக்க, அதிக விடுதிகள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில், 16 பள்ளி விடுதிகள், எட்டு கல்லூரி விடுதிகள், ஒரு, ஐ.டி.ஐ., விடுதி என, 25 புதிய விடுதிகள் துவங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதில், ஒரு விடுதிக்கு, 50 மாணவ, மாணவியர் வீதம், 1,250 மாணவ, மாணவியர் சேர்க்கப்படுவர்; 75 புதிய பணியிடங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இத்துறையின் கீழ், இயங்கி வரும், 68 கல்லூரி மாணவர் விடுதிகளில், 7,828 மாணவர்கள்; 61 மாணவியர் விடுதிகளில், 4,738 மாணவியர் தங்கி படிக்கின்றனர்.
இவர்களுக்கு, 5 கோடி ரூபாய் செலவில், இரண்டடுக்கு கட்டில்கள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும், உணவுப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை அளக்க, அனைத்து விடுதிகளுக்கும், மின்னணு எடை இயந்திரம் வழங்கவும், 582 மாணவியர் விடுதிகளுக்கு, நாப்கின்களை அழிப்பதற்கான இயந்திரங்கள், 1.45 கோடி ரூபாயில் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.