Pages

Saturday, January 19, 2013

அகஇ - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.

SSA - INDUCTION TRAINING MODULE FOR TEACHERS CLICK HERE...
2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் ஒருவருக்கு ரூ.200 வீதம் 3 நாட்களுக்கு ரூ.600 ஒதுக்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது அந்தந்த மாவட்டத்தில் 4 அல்லது 5 மண்டலங்களாக பிரித்து நடத்தவும், ஒரு சில மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. உண்டு உறைவிடப் பயிற்சி என்பதால் போர்வை, சோப்பு மற்றும் பற்பசை ஆகியவை ஆசிரியர்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் அரசின் திட்டங்கள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009 (RTE ACT 2009), ஆசிரியர்களின் பணி, ஆசிரியரின் நடத்தை விதிகள், தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் குழந்தைகள் நல ஆணையம், அரசின் எதிர்பார்ப்புகள், மற்றும் கொள்கைகள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, யோகா ஆகியவை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.