Pages

Friday, January 4, 2013

வாட்டியெடுக்கும் குளிரால் பள்ளிகளுக்கு ஜனவரி 14 வரை விடுமுறை

தலைநகர் டில்லியில் கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. 44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை குறைந்தபட்சத்தை தொட்டுள்ளது.
அதிகபட்சமாக வெப்பநிலையே 9.8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டில்லியில் உள்ள 4 ஆயிரத்து 500 பள்ளிகளுக்கு ஜன. 14ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர் சற்றே ஆறுதல் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.