பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, செய்முறைத் தேர்வு நடக்கும் தேதியை, நேற்று வரை, தேர்வுத்துறை அறிவிக்கவில்லை. இதனால், மாணவ, மாணவியர் மத்தியில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பை பொறுத்த வரை, தேர்வெழுதும் அனைத்து மாணவ, மாணவியரும், அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வில் பங்கேற்க வேண்டும். இதனால், செய்முறைத் தேர்வு தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தேர்வுத்துறை வட்டாரத்தினர் கூறுகையில், "பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுக்கு, இன்னும் தேதி முடிவு செய்யவில்லை. பிப்ரவரி இறுதிக்குக்குள், செய்முறைத் தேர்வு, நடத்தி முடிக்கப்படும். இதற்கான தேதிகளை, ஓரிரு நாளில் அறிவிப்போம்" என, தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.