Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, April 30, 2012

    மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவைகளின் மே தின வாழ்த்துச் செய்தி.

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை4.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1.நைல் பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடம் - ஆப்ரிக்கா
    2. இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்

    தொழில்நுட்ப நிறுவனங்களை மூட நிர்வாகம் முடிவு.

    நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களுக்காக மூட முடிவு செய்துள்ளது. இதற்கான அனுமதி வேண்டி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலிடம் விண்ணப்பித்துள்ளது என மத்திய இணை அமைச்சர் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைசச்சர் புரந்தரேஸ்வரி தெரிவித்துள்ளார்.

    டான்செட் தேர்வு முடிவு வெளியீடு.

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் பொது நுழைவுத்தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்களை சேர்க்க, கடந்த மார்ச் மாதம் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி டான்செட் நுழைவுத் தேர்வினை நடத்தியது.
    இத்தேர்வை ஏழுதி அவலுடன் முடிவுகளுக்காக காத்திருந்த மாணவ-மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

    Sunday, April 29, 2012

    கல்வி கடன்- பொதுவான கேள்வி பதில்கள்.

    ஏழை மாணவர்களின் வரப்பிரசாதமான கல்விக் கடன் திட்டம், அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்ட - பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றன.
    தங்களது குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது வங்கியில் கல்விக் கடன் பெற்றே தீர வேண்டும் என்று ஆண்டுதோறும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பெற்றோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கல்விக் கடன் பெறுவது தொடர்ந்து சிக்கலான நடைமுறையாகவே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வங்கிகளின் நடை முறைகளை பெற்றோர், மாணவர்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் இருப்பதும், சரியான முறையில், சரியான நபர்களை அணுகாததுமே இதற்குக் காரணம் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.
    வங்கிக் கடன் விஷயத்தில் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு சில முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்த பதில்கள் வருமாறு:

    இலவச சமச்சீர் பாடப்புத்தகங்கள் விநியோகம் துவக்கம்.


    தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கான இலவச சமச்சீர் பாடப்புத்தங்களை வினியோகம் செய்யும் பணி துவங்கியது.
    தர்மபுரி மாவட்டத்தில் 221 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்புக்கு தேவையான சமச்சீர் பாட புத்தகங்கள் சென்னை பள்ளி கல்வி துறையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவை தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளன.

    இடமாறுதல் விண்ணப்பங்களை பெற தடை - ஆசிரியர்கள் அதிர்ச்சி.

    திருநெல்வேலி: இடமாறுதல் விண்ணப்பங்களை பெற திடீர் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தொடக்க கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    தமிழகத்தில் தொடக்க கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கிற்கு அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தது.

    மே 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட வாய்ப்பு.

    சிறுபான்மை மொழிப்பாட விடைத்தாள்கள் தவிர, வேறு தாள்கள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், மே மாதம் 20க்குள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகக்கூடும் என்று துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    B.SC.,(MATHS) DUAL DEGREE - தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி தெளிவுரை பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குனரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ஒ.மு.எண். 14436 / சி 3 / இ 1 / 2012, நாள். 24.03.2012 
    10+2+3+1 கல்வித் தகுதியுடன் கூடுதலாக பி.எஸ்.சி. கணிதம் ஓராண்டு (இரட்டைப்பட்டம்) முறையில் தேர்ச்சி பெற்றால் பட்டதாரி ஆசிரியர் கணிதம் பதவி உயர்விற்கு விதிகளின் படி பரிசீலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  

    Saturday, April 28, 2012

    தொடக்கக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் 01.06.2012 பள்ளி திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    *தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 9505 / ஜே3 / 2012, நாள். 20.04.2012 
    *தொடக்கக்கல்வி இயக்கக கட்டுபாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய துவக்க / நடுநிலைப்பள்ளிகளிலும் கோடை விடுமுறை முடிந்து 2012-2013 ஆம் கல்வியாண்டில் 01.06.2012 வெள்ளிக்கிழமை அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
    *இதனை அனைத்து தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய அறிவுரைகள் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

    அனைத்து 9ம் வகுப்பு மாணவர்களும் ஆல் பாஸ்?...

    அரசு பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் முடியும் முன்பே, 10ம் வகுப்புக்கான புதிய புத்தகங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இதனால், இந்தாண்டு 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் "ஆல் பாஸ்" அறிவிக்க முடிவு செய்துள்ளதாக, கல்வி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    பொறியியல் கல்லூரி :ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை மாற்றம்.


    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தியரி தேர்வுகள் மே மற்றும் ஜுன் மாதங்களில் நடத்தப்படுவதற்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருந்தது.

    ஏஐஇஇஇ : ஞாயிற்றுக்கிழமை எழுத்துத் தேர்வு.

    சென்னை, ஏப். 7 : இந்தியாவில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஏஐஇஇஇ எனப்படும் அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வாகும். இந்தியாவில் இருக்கும் பொறியியல் கல்லூரிகளில் பொறியியல், ஆர்கிடெக்சர், பிளானிங், பார்மசி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க இந்த பொது நுழைவுத் தேர்வு அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    TNPSC - Posts included in Group-IV Services & Executive Officer, Gr.III included in Group-VIII Services.

                                                                                                 INSTRUCTION TO THE CANDIDATES...
    List of Notifications
    S No.Advt. No./ Date of NotificationName of the PostOnline RegistrationDate of ExaminationActivity
    FromTo
    114/2012Posts included in Group-IV Services
    27.04.201228.05.201207.07.2012Apply Online
    Executive Officer, Gr.III included in Group-VIII Services

    ஜுலை 7ம் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு.

    குரூப் - 4 நிலையில், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்காக, 10 ஆயிரத்து 718 பேரை தேர்வு செய்யும் அறிவிப்பை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி நிலையில், ஜூலை 7ம் தேதி தேர்வு நடைபெறும்.
    இந்த போட்டித் தேர்வை, 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மே 13ல் நடக்கிறது விரிவுரையாளர் போட்டித்தேர்வு.

    கடந்த 22ம் தேதி நடக்க இருந்த விரிவுரையாளர் பணிக்கான போட்டித் தேர்வு, மே 13ம் தேதி நடைபெறுகிறது.
    அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான போட்டித்தேர்வு, 22ம் தேதி நடக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக, இத்தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

    ஓய்வூதியம் / ஓய்வூதியதாரர்கள் - குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - தமிழக அரசு தெளிவுரை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசின் தெளிவுரை கடித எண். 15082 / ஓய்வூதியம் / 2012, நாள். 24.4.2012. 
    பணியிலிருந்து ஓய்வு பெற்று அதற்குரிய ஓய்வூதியம் மற்றும் வாழ்க்கை துணை (SPOUSE) இறப்பிற்கு பிறகு பெரும் ஓய்வூதியம் ஆகிய இரண்டு ஒய்வூதியன்களைப் பெறும் 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் ஓய்வூதியம் / கூடுதல் குடும்ப ஓய்வூதியம் என இரண்டு ஒய்வூதியங்களிலும் உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இரண்டு ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    RULES – Tamil Nadu School Educational Subordinate Service - Art Masters – Amendment to Special Rules – Orders – issued.

    G.O.Ms.No.81 School Education (M1) Department Dated:26.03.2012.
    “(iv) A Diploma in Fine Arts awarded by the Director of Technical Education or a
    Degree in Fine Arts awarded by the Madras University or the Bharathidasan University.”

    Friday, April 27, 2012

    School Education – Registration in employment Exchange for the candidates appearing for April 2012 SSLC Examinations – Instruction issued – Regarding.

    Proceedings of the  Director of School Education, Chennai-6 R.C.No. 25759  /K/E1 /2012 dt.   .04.2012
    In the reference 2nd cited Commissioner of Government Data Centre, Guindy requested to enter the following Data in the web site address  www.peps.tn.nic.in for Online registration in Employment Exchange  for all the students who have appeared for SSLC Public Examination held in April 2012.



    ஆசிரியர் தகுதித் தேர்வு! TET: தமிழ் வினா - விடை!

    கடந்த மூன்று வாரங்களாக நாளிதழ்களிலும் நூல் விற்பனை நிலையங்களிலும் வெகுவாகப் பேசப்படுவது ஆசிரியர் தகுதித் தேர்வு. ஓராண்டு, இரண்டாண்டு எனப் பணிப் பயிற்சி பெற்று ஆசிரியர் பட்டய, பட்டச் சான்றுகள் எல்லாம் முழுமையான பயனைத் தராது ஆசிரியப் பணிக்குச் செல்வதற்கு. பணிக் கல்வி பெற்ற பின்னரும் மீண்டும் தகுதித் தேர்வினை எழுதி 60% மதிப்பெண் வாங்க வேண்டிய கட்டாய நிலை. அவர்களுக்காகவே தமிழ் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கி வருகிறோம். படித்து பயன் பெறுங்கள்.

    ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு 2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் பொதுமாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 09502 / டி1 / 2012, நாள். 27.04.2012. 
    2012 - 2013ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்றியம் / மாநகராட்சி / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் வழங்குவதற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உதவி தொடக்கக் கல்வி அலுவலக விளம்பர பலகையில் ஒட்டி அதன் மூலம் ஆசிரியர்களிடம் மாறுதல் விண்ணப்பங்கள் பெறுவது சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டது.
    தற்போது மேற்படி பணிகளை அடுத்த அறிவிப்பு பெறப்படும் வரை நிறுத்தி வைக்கும்ப்படும்படி அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

    அரசு கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி : ஆசிரியர்களுக்கு அழைப்பு.

    தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உதவும் வகையில் கேபிள் டிவி வழியாக புதிய அரசு கல்வி ஒளிபரப்புச் சேவையை துவங்க உள்ளது. இந்த தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வியை அளிக்கும் நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வமுள்ள ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    தினந்தோறும் 1 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்து பாடப்பகுதிகள் திறமை வாய்ந்த ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட உள்ளது.

    விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்.

    பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறையால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
    பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள், நாளை (ஏப்.,28) முதல் 66 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அறைகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் காலை 8.30 முதல் 12.30 மணி , பிற்பகல் 1.30 முதல் மாலை 4.30 மணிவரை திருத்தப்படுகிறது.

    கல்விமுறையின் குறைகளை களைய அமைச்சர் தலைமையில் குழு அமைப்பு.

    தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளைக் களைந்து, கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேரை உறுப்பினர்களாக நியமித்து, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    இக்குழு, தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளை கண்டறிந்து, தேவையான மாற்றங்களை கொண்டு வர, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யும்.
    பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி தலைமையில், ஒன்பது பேர் உறுப்பினர்களாக வல்லுனர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழாசிரியர்கள் இனி பட்டதாரி ஆசிரியர்கள்!

     "தமிழாசிரியர்" என்பதை, இனி, "பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)" என ஆசிரியர்கள் குறிப்பிட வேண்டும் என்று, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
    இதுகுறித்து, மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு வந்துள்ள உத்தரவு: "பள்ளி உதவி ஆசிரியர்" என்பது, இனிமேல், பட்டதாரி ஆசிரியர் என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    10-ம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் 26 முதல் விற்பனை.

    பத்தாம் வகுப்பு புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை (ஏப்ரல் 26) முதல் விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. ஒரு புத்தகத்தின் விலை ரூ.70. ஒரு செட்டின் விலை ரூ.350 ஆகும்.
     அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவசப் புத்தகங்கள் மாவட்டங்களில் உள்ள மையங்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்களைப் பள்ளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வியாழக்கிழமை முதல் மேற்கொள்ள உள்ளனர்.

    Wednesday, April 25, 2012

    டிஇடி : சமூக அறிவியல் வினா-விடை தொகுப்பு 3.

    தமிழகத்தில் ஜுன் மாதம் நடைபெற உள்ள ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள ஆசிரியர்களுக்கு ஏற்கனவே குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை வினாக்களை வழங்கியுள்ளோம். அந்த வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்து இங்கு வழங்கியுள்ளோம்.
    1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்
    2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்

    மே 5-ல் சென்னையில் ஆசிரியர் கூட்டணி மாநில மாநாடு.

    தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னையில் வரும் மே 5-ம் தேதி மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
     தமிழக ஆசிரியர் கூட்டணி (கோவை மாவட்டக் கிளை) மாநிலத் தலைவர் கோ.முருகேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
     தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில மாநாடு மற்றும் கல்விக் கருத்தரங்கம் ஆகியவை வரும் மே 5-ம் தேதி, சென்னை பல்கலை நூற்றாண்டு விழா கலை அரங்கில் நடைபெறுகிறது.

    எச். ஐ. வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள தமிழகத்தில் செஞ்சுருள் விரைவு தொடர்வண்டி வருகை.

    தமிழக அரசின் செய்தி வெளீயீடு எண். 272, நாள். 25.04.2012

    எச். ஐ. வி / எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள தமிழகத்தில் செஞ்சுருள் விரைவு தொடர்வண்டி வருகை. 09.05.2012 முதல் 29.05.2012 வரை.

    உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தை கண்டித்து ஏப்.27-ல் ஆர்ப்பாட்டம்.

    பரமத்திவேலூர், ஏப். 24: பரமத்தி உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஏப்ரல் 27-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
    சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பரமத்தி வட்டார செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிறப்பு பி.எட் படிப்பும், பொது பி.எட் படிப்புக்கு சமமானதே: அரசு.

    மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில் வழங்கப்படும் சிறப்பு பி.எட்., படிப்பை பொது பி.எட்., படிப்போடு இணையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    பி.எட்., படிப்பில், பார்வையற்ற குழந்தைகள் உள்ளிட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் வகையில், சிறப்பு பாடத்திட்டம் உள்ளது.

    ஆசிரியர்கள் தகுதித் தேர்வுக்கு தயாராக தமிழ் வினா-விடை .

    தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில்தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
    1. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுவது எந்த நூல் - திருக்குறள்

    ஆறாவது ஊதியக் குழு அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்கள்.

    ஆறாவது ஊதியக் குழுவின் அமுல்படுத்தியத்தில் ஒரு சில பிரிவுஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளுக்கான காரணங்கள் - அதற்கான அரசாணைகள் மற்றும் விளக்கங்கள் வரிசையாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை - ஆசிரியர்கள் பொது மாறுதல் - அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களுக்கு 2012 - 2013-ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் - விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான - அறிவுரை வழங்குதல் - சார்பு.

    பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 200 / ஏ1 / இ2 / 2012, நாள். 23.04.2012
    * மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணபங்களை 25.04.2012 முதல் 28.04.2012-க்குள் மூன்று பிரதிகள் பெற்று மாறுதல் விண்ணபத்தினை தலைமையாசிரியர்  மேலொப்பம் இட்டு 30.04.2012 அன்று வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும்.


    Tuesday, April 24, 2012

    Honble Minister for School Education and Sports and Youth Welfare handed over Jeeps to the Elementary Education Department, under the Part -2 scheme.


    மே மாதம் இறுதியில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நேற்றுடன்(ஏப்ரல் 23ம் தேதி) முடிவடைந்தது. கடந்த 4ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்கிய நிலையில், கடைசி நாளான நேற்று, சமூக அறிவியல் தேர்வுடன் முடிவடைந்தது.
    3,033 மையங்களில் நடந்த தேர்வில், மொத்தம், 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவர்கள் எழுதி உள்ளனர்.

    ஊதிய குறை தீர்க்கும் பிரிவிற்கு அனுப்ப வேண்டிய மாதிரி படிவம்.

    ஊதிய குறை தீர்க்கும் மூன்று அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உரிய மனுக்களை பெற்று பரிசீலித்து ஊதிய முரண்பாடுகள் களைவது குறித்து அரசுக்கு உரிய பரிந்துரை அறிக்கையை அளிக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
    ஊதிய குறை தீர்க்கும் குழுவிடம் 04.05.2012-க்குள் கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது dspgrc@tn.gov.in எனற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    எனவே இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் ஊதிய முரண்பாடுகளை குறித்து கோரிக்கை மனு ஒன்று PDF FORMAT-ல் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து E-MAIL முகவிரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் அப்படிவத்தில் தங்கள் கருத்துகளை சேர்க்க விரும்பினால் சேர்த்து 04.05.2012-க்குள் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
    குறிப்பு : கோரிக்கைகளை நேரடியாகவோ அல்லது  E-MAIL முகவிரி மூலமோ அனுப்பவும்.
    அப்படிவத்தில் தங்கள் பெயர் முகவரி,தொடர்பு எண் மற்றும் E-MAIL ஆகியவை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
    மாதிரி படிவம் பதிவிறக்கம் செய்ய....
    நன்றி : தாமஸ்(கடித வடிவமைப்பு).


    Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu.

    Directorate  of Employment  and Training
    Information on Cut-off  Seniority dates adopted for nomination
    In Employment Offices In Tamil Nadu
    (February - 2012)
    Cut-off Seniority dates for Computer Instructor and Secondary Grade Teachers  
    List of Candidates nominated for the post of Secondary Grade Teacher
    Tamil/English        Telugu        Kannada        Malayalam       Urdu 

    விஐடிஇஇஇ கலந்தாய்வு தேதி வெளியீடு.

    வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுத்தில் பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க ஏப்ரல் 22ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
    இந்த தேர்வை அடுத்து, அடுத்த மாதம் மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

    மே 12-ல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.

     தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் மே 12-ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
     தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 30-ம் தேதி முடிவடைந்தது.
     இந்தத் தேர்வில் மொழிப்பாடங்கள் மற்றும் கணக்கு தேர்வுகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ந்த நேரத்தில், இயற்பியல் தேர்வில் 10 மற்றும் 6 மதிப்பெண்கள் பிரிவு வினாக்கள் பாடத் திட்டத்தில் இல்லாதவையாக கேட்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் சற்று கலக்கமடைந்தனர்.

    தபால் நிலையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

    தமிழகத்தில், தேர்வு செய்யப்பட்ட தபால் நிலையங்களில், ஆன்-லைனில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு விண்ணப்பிக்க, சேவை துவக்கப்பட உள்ளது.
    போலீஸ் தேர்வு, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான விண்ணப்பங்கள், தபால் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, தங்க நாணயம் விற்பனை, மின் கட்டணம் வசூல், வாக்காளர் விண்ணப்பம் என, தபால் நிலையங்களில் மக்கள் சேவைக்கான பணிகள் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்தை மே 2க்குள் முடிக்க உத்தரவு.

    பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை மே 2க்குள் முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5,557 பள்ளிகளைச்சேர்ந்த 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொது தேர்வு எழுதியுள்ளனர்.

    தொடர் மற்றும் முழுமையான மதீப்பீட்டு பயிற்சியினை ஆசிரியர்களுக்கு அளிக்கும் பொழுது கல்வி அலுவலர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்.


    மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 20.04.2012.
    * தனியார் பள்ளி / கல்லூரி / ஒன்றியத்திலுள்ள அனைத்து வசதிகளுடன் கூடிய கல்வி நிறுவனம் பயிற்சி மையமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
    * பயிற்சி மையங்களில் ஒவ்வொரு வகுப்பறையிலும் LCD PROJECTOR உரிய மின் இணைப்பு வசதியுடன் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
     * ஒரு அறைக்கு 40 முதல் 50 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அறைகள் உள்ள நிறுவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
    * காற்றாடி வசதிகளுடன் போதிய வெளிசத்துடன் இருத்தல் வேண்டும்.
    * கேண்டின் வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
    GENERATOR வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்.
    * குடிநீர் வசதி, கழிப்பிட வசதி ஆகியவை ஆசிரியர்களின் எண்ணிக்கையை ஏற்ப அமைய வேண்டும்.
    * பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்படியினை பயிற்சி முடிந்தவுடன் முறைப்படி வழங்குதல் வேண்டும்.  

    முப்பருவ முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பான ஒரு நாள் பயிற்சி.

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 796 / ஈ 2 / 2012, நாள். 23.04.2012.
    முப்பருவ முழுமையான மற்றும் தொடர் மதீப்பீட்டு கல்வி (CCE) தொடர்பாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க மற்றும்  நடுநிலைப்பள்ளிகளில்  பணிபுரியும் 1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி ஒன்றியத்திலுள்ள 50% ஆசிரியர்களுக்கு 26.04.2012 அன்றும் மீதமுள்ள 50% ஆசிரியர்களுக்கு 27.04.2012 தேதியில் அந்தந்த ஒன்றியங்களில் நடைபெறவுள்ளது.
    இப்பயிற்சியில் அனைத்து வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொள்ள அறிவுரை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Monday, April 23, 2012

    ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

    ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பாணைக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.
    ராமநாதபுரம் சம்பகுளத்தை சேர்ந்த செந்தில்வேல், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கொன்னகாடு பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறேன். தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் 23க்கு பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என தமிழக அரசு 2012ல் பிப்ரவரி 7ல் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

    பாரதியார் பல்கலை. பி.எட். நுழைவுத் தேர்வு: 1,591 பேர் எழுதினர்.

    மாநிலம் முழுவதும் 9 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாரதியார் பல்கலைக்கழக பி.எட். நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.
     பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மூலமாக 2012-2013 கல்வி ஆண்டுக்கான பி.எட். நுழைவுத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
     மாநிலம் முழுவதும் 9 மையங்களில் நடைபெற்ற இந்த நுழைவுத் தேர்வை 1,591 பேர் எழுதினர்.

    இடைநிலை ஆசிர்யர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிற வகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலை தலைமை ஆசிரியர் பணியிடத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.500/- சிறப்புப்படிக்கு பதிலாக ரூ.750/- தனி ஊதியம் 01.01.2011 முதல் வழங்கியது குறித்து தெளிவுரைகள் சார்பாக.

    தமிழக அரசின் (நிதித்துறை) கடித எண். 8764 / சி.எம்.பி.சி. / 2012 - 1, நாள். 18.4.2012.
    *  இத்தனிஊதியம் தொடர்ந்து பெற தகுதி உடையவர்கள் ஆவார். 
    *இவ்வகை ஆசிரியர் பணியிடங்களிலிருந்து பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு உயர் பதவியில் ஊதியம் நிர்ணயம் செய்யும் போது இத்தனிஊதியம்  அடிப்படை ஊதியத்துடன் சேர்த்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஊதிய நிர்னய்யா செய்யப்பட வேண்டும். அதன் பின்னர் உயர்பதவியில் இத்தனிஊதியம் த்தொடர்ந்து அனுமதிக்கப்பட கூடாது.
    * 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- 01.01.2006 - க்கு முன்னர் தேர்வுநிலை / சிறப்புநிலை எய்திய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வகை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பின்னர் உயர்பதவியில் சிறப்புப்படி ரூ.500/- தொடர்ந்து பெற தகுதியற்றவர்கள்.

    பள்ளி மாணவர்களுக்கு சி புரோகிராம் பயிற்சி.

    பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள், தங்களது கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளும் வகையில் சி புரோகிராம் பயிற்சியை அண்ணா பல்கலைக்கழகம் அளிக்கிறது.
    ஒரு வார கால இந்த பயிற்சியில் சி புரோகிராமின் அடிப்படை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் கற்றுக் கொடுக்கப்படும்.

    பல்கலைக்கழகங்களில்(தொலைத்தூரக்கல்வி) வாயிலாக பயிலும் இரட்டைப் பட்டங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள விளக்கம்.

    ஆசிரியர் தேர்வு வாரிய பொது தகவல் அளிக்கும் அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ஓ.மு.எண்.1464 /ஆ4 / 2011, நாள். 14.02.2012.
    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பொது தகவல் அளிக்கும் அலுவலரால் அளிக்கப்பட்டுள்ள 14.02.2012 அன்றைய நாளிட்ட பதிலில் "தற்போதுள்ள நடைமுறைப்படி ஆங்கிலம், தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரட்டைப்பட்டங்கள் பரிசீலிக்கப்படுகிறது". என குறுப்பிடப்பட்டுள்ளது.  

    தொழில்திறன் குறித்த பாடத்திட்டங்கள் பள்ளி, கல்லூரிகளில் இடம் பெறும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களை தொழிற்திறன் மிக்கவர்களாக மாற்றும் வகையில், அதுகுறித்த பாடங்கள் அமைக்கப்படும்'' என, மாநில திட்ட கமிஷன் உறுப்பினர் பாலகுருசாமி தெரிவித்தார்.
    அவர் கூறியதாவது: தொழிற்கல்வி படித்தாலும், அறிவியல், கலைப்படிப்புகள் படித்தாலும், மாணவர்கள் அதில் நிபுணத்துவம் பெறுவது குறைவு. வெறும் படிப்பால், மதிப்பெண்ணால் பயனில்லை. இந்தியாவில் திறமை வாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பது கடினம். வரும் கல்வியாண்டிலிருந்து பள்ளி, கல்லூரி, பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., பாடத்திட்டங்களில், தொழிற்திறனுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

    சிறப்பாசிரியர் பணியிடத்துக்கு சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்.

    சிறப்பாசிரியர் பணி நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, சேலம் ஜெயராணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் துவங்கியது.தமிழகத்தில் பல ஆண்டுகளாக சிறப்பாசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமலும், புதிய பணியிடங்கள் வழங்கப்படாமலும் இருந்தது.
    கடந்த மாதத்தில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அனைத்து பள்ளிகளிலும் சிறப்பாசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு, தமிழகம் முழுவதும், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு : சமூக அறிவியல் வினா-விடை.

    தமிழகத்தில் ஜூன் 3-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தற்போது சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினா விடைகளை தயாரித்துவழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.
    1. ஹரப்பா நாகரிகம் - நகர நாகரிகம்
    2. திருவள்ளுவர் பிறந்த ஆண்டாக தமிழறிஞர்கள் கருதும் ஆண்டு - கி.மு.31

    10-ம் வகுப்பு கணிதத் தேர்வு: குழப்பமான கேள்விக்கு மதிப்பெண் கிடைக்குமா?

    பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வில் ஒரு மதிப்பெண் கேள்வி பகுதியில் மாணவர்களைக் குழப்பும் வகையில் கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு உரிய மதிப்பெண் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடம் ஏற்பட்டுள்ளது.
      தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 87 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். நேரடித் தனித் தேர்வர்கள் 19,574 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
      ஏப்ரல் 16-ம் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. இதில், பிரிவு 1-ல் மூன்றாவதாக இடம்பெற்றிருந்த கேள்வி மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது.

    Sunday, April 22, 2012

    ஆசிரியர்களின் பதவி உயர்வு பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் உறுதி.

    * சட்டசபையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் பேசும் போது " ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக கூறுகின்றனர் ". என்றார் 
    *இதற்கு கல்வி அமைச்சர் : இப்பிரச்சனையை எனது கவனத்திற்கு ஆசிரியர்கள் கொண்டு வந்துள்ளனர், விரைவில் இப்பரச்சனை தீர்க்கப்படும் என்று கூறினார்.  

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு (CPS) எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விவரம் வருமாறு :
    தமிழ்நாடு தொடக்கக்கல்வி துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டப்படி சில விவரங்கள் கேட்கப்பட்டது. 01.04.2003 முதல் 28.02.2010 வரை நியமிக்கப்பட்டவர்களில் இயக்குனர் அளித்துள்ள தகவலின் படி 25 பேர் மரணமடைந்துள்ளனர் 2 பேர் ஒய்வுப் பெற்றுள்ளனர். ஆனால் இன்றைய தேதிப்படி 56 பேர் மரணமடைந்துள்ளனர். 4 பேர் ஓய்வுப் பெற்றுள்ளனர்.

    உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் / அறிவியல் ஆசிரியர்களுக்கு திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் வீனஸ் பயணம் சார்பாக பயிற்சி.

    தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 009544 / கே2 / 2012, நாள். 17.02.2012.
    திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் வீனஸ் பயணம் சார்பாக ஒரு நாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த அரிய சிறப்பு வாய்ந்த அறிவியல் நிகழ்வினை பொது மக்கள்களுக்கும் மாணவ / மாணவியருக்கும் கொண்டு செல்வதற்காக இப்பயிற்சி நடைபெறவுள்ளது. 

    தரமணியில் ரூ.60 கோடியில் பி.காம்., பி.எல். புதிய படிப்பு தொடக்கம் : அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் முடிவு.

    பி.காம்., பி.எல் என்ற புதிய 5 ஆண்டு சட்டப் படிப்பை தொடங்க, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விஜயக்குமார் கூறியதாவது: முதல் முறையாக பி.காம்., பி.எல் என்ற புதிய படிப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான உரிமையும் பெற்றுள்ளோம்.

    வி.ஏ.ஓ. தேர்வு விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு.


    Village Administrative Officer, 2009 - 2010
    (Marks obtained by the candidates in the Written Examination)
    (Date of Written Examination:20.02.2011)

               Enter Your Register Number :                                      


    ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து நிபுணர்கள் ஆலோசனை.

    ராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜா நினைவு திருமண மண்டபத்தில் தினமலர் நாளிதழ் சார்பில், ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட்., படித்தவர்களுக்கான டி.இ.டி., வழிகாட்டு கருத்தரங்கு நடந்தது. ஏராளமானோர் இதில் பங்கேற்று பயன்பெற்றனர். இதில், தேர்வை எதிர்கொள்வது, அதிக மார்க் வாங்கும் வழிகள் குறித்து நிபுணர்கள் பேசியதாவது:

    jkpof Mrphpah; kd;w Nfhhpf;iffs;

     ·        ,ilepiy Mrphpah;fspd; Cjpa FiwghLfis fisa mikf;fg;gl;l FOtplk; kD nfhLj;jy;

    ·        FWQ;nra;jp %yk; Mrphpah;fspd; tUifia gjpT nra;Ak; Kiwia iftpl Ntz;Lk;.
    ·        nray; topf;fw;wy; Kiwia iftpLjy;.
    ·        Kiwahd fy;tp (+2 tFg;G ) gapyhky; jpwe;j ntsp gy;fiyf;fofj;jpy; (OUS ) Neubahd Kiwapy; gl;lk; ngw;w Mrphpah;fSf;F  muR Mizia kPwp toq;fg;gl;l gjtp cah;tpid ,uj;J nra;J Kiwahf gapd;w Mrphpah;fSf;F gjp cah;tpid toq;fpl Ntz;Lk;.
    ·        jd; gq;fspg;G Xa;ëjpa jpl;lj;jpid (CPS)  KOikahf ,uj;J nra;jpl Ntz;Lk;.
    ·        Mq;fpyg; gl;lg;gbg;G gapd;w ,ilepiy Mrphpah;fspd; gjtp cah;tpid Kd;Dhpik gl;baiy nfhz;L fhy jhkjkpd;wp toq;fpl Ntz;Lk;.
    ·        Mrphpah;fSf;F midtUf;Fk; fy;tp jpl;lj;jpd; %yk; toq;fg;gLk; midj;J gapw;rp tFg;GfisAk; brk;gh; 15 k; Njjpf;Fs; Kbj;Jf; nfhs;s Ntz;Lk;.
    ·        1-6-2006 Kjy; fhy Kiw Cjpak; ngw;wth;fSf;F mth;fs; gzpNaw;w ehs; Kjy; fhy Kiw Cjpaj;jpid toq;fpl Ntz;Lk;.
    ·        Mrphpah;fspd; fye;jha;tpid Nk khjj;jpNyNa elj;jp Kbf;f Ntz;Lk;.
    ·        Mrphpah;fSf;fhd jFjpj; Njh;tpid iftpl Ntz;Lk;.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து வழக்கு - அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

    இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்புவதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.
    திண்டுக்கல் மாவட்டம் சானர்ப்பட்டி அருகே உள்ள மலைப்பட்டி ஊராட்சி ஒன்றியம் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரியும் திரு. எம். கோபால் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட மனுவில் கூறி இருப்பதாவது : - 
    அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கீழ் ஏராளமான நடுநிலைப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.

    Saturday, April 21, 2012

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறாது.


    முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சி மே மாதத்தில் நடைபெறும் என பரவலாக பேசப்பட்டு வந்தது. அதே சமயம் ஆசிரியர்களுக்கு பல்கலைக்கழகத் (தொலைத்தூர கல்வி)  தேர்வு மற்றும் விடுமுறை காரணங்களுக்காக தள்ளி வைக்க ஆசிரியர்களின் சார்பில் பல்வேறு தரப்பு  அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. 
    இது குறித்து மாநில அளவில் முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறைக்கான பயிற்சியில் பங்குபெற்ற ஆசிரியர் ஒருவர் கூறுகையில் ஊராட்சி ஒன்றிய / அரசு பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி கிடையாது எனவும், அதே சமயம் மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளை சார்ந்த ஆசிரியர்களுக்கு மே மாதத்தில் பயிற்சி வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக பள்ளிக்கல்வி செயலர் பயிற்சி அரங்கில் தெரிவித்தாக கூறினார்.
    மேலும் 25.04.2012 அன்று முப்பருவ மற்றும் தொடர் மதீப்பீட்டு முறை சம்பந்தமாக அறிமுகப்பயிற்சி  RESOURCE PERSON TRAINING ஒரு நாள் நடைபெறும் என்றும், தொடக்க / அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 1 முதல் 5 வகுப்பு நடத்தும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் பயிற்சி 26.04.2012 மற்றும் 27.04.2012 ஆகிய இரண்டு கட்டங்களாக மாநில முழுவதும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

    பகுதிநேர பொறியியல் படிப்புக்கான விண்ணப்பம்.

    தமிழக அரசின் செய்தி வெளியீடு எண். 264 நாள். 21.04.2012.
    2012-2013-ஆம் கல்வியாண்டிற்கு பகுதிநேர பொறியியற் பட்டப்படிப்பு (பி.இ./பி.டெக்.) சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் கீழ்க்காணும் பொறியியற் கல்லூரிகளில் 27.4.2012 முதல் 18.5.2012 முடிய பயிலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.

    பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மே முதல் விண்ணப்பம் : ஜூலை 2வது வாரம் கவுன்சலிங்.

    பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் துவங்கும் அண்ணா பல்கலை அதிகாரி ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.
    பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான மேற்படிப்பு திட்டமிடல் தொடர்பான 2 நாள் கருத்தரங்கு, கண்காட்சி இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) சார்பில் திருச்சியில் நேற்று தொடங்கியது. 

    மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு அறிவிப்பு.

    இந்தியாவில் உள்ள ஏழு மத்திய பல்கலைக்கழகங்களில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு, முதுநிலைப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
    பீகார் மத்திய பல்கலைக்கழகம் (www.cub.ac.in), ஜம்மு மத்திய பல்கலைக்கழகம் (www.cujammu.in), ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம் (www.cuj.ac.in), காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம் (www.cukashmir.ac.in), கேரளா மத்திய பல்கலைக்கழகம் (www.cukerala.ac.in),

    ஆசிரியர் தகுதித் தேர்வு : தமிழ் வினா-விடை.

    ஆசிரியர் தகுதித் தேர்வெழுத உள்ள இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தங்களின் தரத்தினை உயர்த்திக் கொள்ளும் வகையில் தமிழ் பாடத்திற்கான வினா விடைகளை வழங்கிவருகிறோம் படித்து பயன்பெறுங்கள்.

    திருக்குறள்


    திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன. அவை
    1. அறத்துப்பால் - 38 அதிகாரங்கள்
    2.பொருட்பால்  -  70 அதிகாரங்கள்
    3.காமத்துப்பால் - 25 அதிகாரங்கள்
    திருக்குறள் 1330 குறள்களைக் கொண்டது.

    ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியத்திற்கு தனி இயக்குனர்.

    ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இயக்குனர் மற்றும் முதன்னை கல்வி அலுவலர் பணியிடங்களை தோற்றுவித்து, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
    மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதி தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அரசு, உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    2010 ஆகஸ்டு 23 பிறகு பணி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியராக பணியை தொடர முடியும் என்பதால், இதற்காக ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
    பொதுவாக இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களையும், ஆசிரியர் தேர்வு வாரியம் தான் தேர்வு செய்து பணி நியமனம் செய்கிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின் போது "சீனியாரிட்டி' முறையில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
    தற்போது இடைநிலை ஆசிரியர்களை தவிர, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களை போட்டி தேர்வு மூலம் தேர்வு செய்கின்றனர். தற்போது, இதன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
    தேர்வுக்காக இதுவரை 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய போட்டி தேர்வு மற்றும் முடிவுகள் வெளியிடுவதிலும் திணறும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தகுதி தேர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
    இதை தொடர்ந்து, ஆசிரியர் தகுதி தேர்வை கவனிக்க, தனி இயக்குனர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்திற்கு அனுமதி கோரி, அரசை ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருந்தது. அதன்படி, பணியிடம் தோற்றுவித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதாவால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் பணியிடமும் விரைவில் நியமிக்கப்பட உள்ளன.

    Friday, April 20, 2012

    கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு.

    கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் ரூ.78 கோடியில் புதிதாக 26 மாதிரிப் பள்ளிகள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
    பேரவையில் இதுதொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர்.சிவபதி புதன்கிழமை கூறியதாவது: அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் 44 மாதிரிப் பள்ளிகள் தொடங்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, ஏற்கெனவே 18 பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 26 ஒன்றியங்களில் இந்த ஆண்டு மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படும்.

    PUBLIC SERVICE - COMPASSIONATE APPOINTMENT - RELAXATION AMENDMENT ORDER ISSUED.