Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 31, 2012

    முதுகலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் வாயிலாக நியமனம்.

    வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.7992/அ3/2011, நாள். 17.12.2011  

    1 . முதுகலை ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் - ரூ. 2500/-
    2 . பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாத ஊதியம் - ரூ. 2000/-
    3 . வேலூர் மாவட்ட அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலை பள்ளிகள்(காலி பணியிடங்கள்).
    4 . சமந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம்.




    2012 - 2013 கல்வியாண்டிற்கு முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் விவரம் கோருதல்.

    தமிழ்நாடு பள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 001974/W3/E3/2011, நாள். 18.1.2012 


    வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.406/ஆ3/2012, நாள். .1.2012

    அரசு / அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 8 முதல் 12 வகுப்புகளுக்கு நிதி சார்ந்த கல்வியறிவு திட்டம் மாணவ / மாணவியருக்கு அறிமுகப்படுத்தியமை - பாடப்புத்தக்கங்கள் மற்றும் பாடவேளைகள் ஒதுக்குதல்.



    Information on Cut-off Seniority dates adopted for nomination In Employment Offices In Tamil Nadu (Dec-2011)

    Sunday, January 29, 2012

    பள்ளிக் கல்வி இயக்குனர் செயல்முறைகள் RC No 113910/L3/2011 DT18/01/2012

    அரசாணை எண். 100  மூலம் தற்காலிகமாகஉருவாக்கப்பட்ட 4748 மற்றும் 6239 ஆசிரியர் மற்றும் ஆசிரியர்ல்லாத பணியிடங்களுக்கு ஊதியம் நீட்டிப்பு செய்ய வகை செய்யும் பள்ளிகல்வி இயக்குனரின் செயல்முறைகள்... 



    பாரதியார் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பு - அறிவிப்பு வெளியிடு

    New-11-june.gif (19923 bytes)
    பி.எட்., படிப்பு கல்வியாண்டு : 2012 - 14        
    பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப
    கடைசி தேதி :                 28.02.2012       
    நுழைவுதேர்வு நடைபெறும் தேதி:25.03.2012            
    ஒரு வருடத்திற்கு ரூ.18000/-                   
    என     மொத்தம் ரூ.36000/-                                        
    தகுதிகள் : 2 வருடம் ஆசிரியர் பணி அனுபவம்.
               இளங்கலை பட்டத்தில் குறைந்தபட்ச 
               மதிப்பெண்.                          
                          1. OC - 50%                                                        
                          2. BC - 45%                                                        
                          3. MBC- 43%                                                      
                          4. SC - 40%                                                       

    Saturday, January 28, 2012

    தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க. எண். 001504/கே3/2012, நாள்.25.1.2012

    கல்வி நலத்திட்டங்கள் 2011 - 12 கல்வியாண்டில் இலவச பாடநூல்,சத்துணவு உண்ணும் மாணவ / மாணவியர்களின் விவரம் மற்றும் இலவச சீருடைகள் வழங்கிய விவரங்கள் 30.9.2011 படி கோருதல். 
    A, B, C, படிவத்தில் தனித்தனியாக பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
    31.1.2012 குள் இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.



    Friday, January 27, 2012

    2009 - 10 மற்றும் 2010 -11 ஆம் கல்வியாண்டில் நிலை உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் தோற்றுவித்து ஆணை வெளியீடு.

     அரசாணை எண்.15 பள்ளிகல்வி துறை (சி.2), நாள் . 23.1.2012 

    1. நடைமுறைகளில் உள்ள விதிப்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பிக்கொள்ள தொடக்கக்கல்வி இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. 

    2 . இக்கல்வி ஆண்டிலேயே நிரப்பிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 



    Community Mobilization - Non Residential Training to 265284 SMC / VEC Members at CRC Level.

    மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்: ந.க.எண். 831/அ12/கி.க.கு/அகஇ/2011, நாள்.   .1 . 2012.

    கிராமக் கல்விக்குழு / பள்ளி மேலாண்மை  குழுக்களுக்கான 3  நாள் பயிற்சி இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.
    முதற்கட்ட பயிற்சி - 06.02.2012, 07.02.2012 & 08.02.2012

    இரண்டாம்கட்ட பயிற்சி - 13.02.2012, 14.02.2012 & 15.02.2012

    பங்குபெறுபவர்கள் - 1ஊராட்சி மன்ற தலைவர், 1ஆசிரியர், 1SC வார்டு உறுப்பினர், 3 பெற்றோர்கள் என மொத்தம் 6 பேர்.

    பயிற்சி நடைபெறும் இடம் : அந்தந்த பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மையம்(CRC).

    கிராமக்கல்வி குழு ஒரு உறுப்பினருக்கு ரூ.100/- வீதம் 3 நாட்களுக்கு செலவிடும் தொகை ரூ.100 X 3 = ரூ.300/-  

    குறிப்பு : மாநில முழுவதும் ஒரே காலஅட்டவணை பின்பற்றுவதால் பெரும்பாலான மாவட்டங்களிலும் மேற்கண்ட அட்டவணை படி நடைபெறும்.

    Thursday, January 26, 2012

    பள்ளிக்கல்வி அமைச்சர் மாற்றம்


           கல்வி அமைச்சர் மாற்றம் : புதிய கல்வி அமைச்சர் மாண்புமிகு. என்.ஆர். சிவபதி, அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

    New-11-june.gif (19923 bytes) அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2011 - 12 கல்வியாண்டில் முதல்  1 - 8 வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான கணித உபகரண பெட்டி, வண்ணப்பென்சில் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்க விவரம் கோருதல்.




    Wednesday, January 25, 2012

    வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண். 162/DC1/பயிற்சி/2012, நாள். 23.1.2012.

    28.1.2012 சனிக்கிழமையன்று உயர் தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு குறு வளமைய   பயிற்சி நடைபெறவுள்ளது.

    தலைப்பு : மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி(IED).

    வட்டார அளவிலான அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு நான்கு (4) கட்டங்களாக நடைபெறவுள்ளது.

    1. I BATCH TRAINING - 06.02.2012 & 08.02.2012

    2. II BATCH TRAINING - 09.02.2012 & 13.02.2012

    3. III BATCH TRAINING - 14.02.2012 & 15.02.2012

    4. IV BATCH TRAINING - 16.02.2012 & 17.02.2012

    தலைப்பு : புற உள சிந்தனை குறைபாடு, கற்றலில் குறைபாடு, டௌன் அறிகுறிகள் குறைபாடுடைய குழந்தைகள் சார்ந்த உள்ளடங்கிய கல்வி. 


    To Download Vellore SSA CEO Proceeding Click Here 


    மார்டியர் தினம் 2012

    மார்டியர் நம்நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்குபற்று உயிர் நீத்ததின் நினைவாக ஒவ்வொரு வருடமும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    மார்டியர் தினம் 2012 - ஜனவரி 30 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது

    அன்று காலை 11.00 மணிமுதல் 11.02 மணிவரை 2 நிமடங்கள் எழுந்து நின்று அமைதியை கடைபிடிக்க வேண்டும். 

    Tuesday, January 24, 2012

    பள்ளிகல்வித் துறை செயலாளர் மாற்றம்.

    பள்ளிகல்வி துறையின் செயலாளராக திருமதி. சபிதா அவர்களையும், உயர்க்கல்வி துறையின் கூடுதல் தலைமை செயலாளராக திரு. ஸ்ரீதர் அவர்களையும் நியமித்து தமிழக அரசு உத்தரவு.

    தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 025396/K3/11, நாள்.23.1.2012.

    விலையில்லா காலணி வழங்குதல் குறித்து இயக்குனர் செயல்முறைகள் 

    1 .    அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2011 - 12 கல்வியாண்டில் முதல்  1 - 8 வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு  இலவச காலணி வழங்க விவரம் கோருதல்.

    பள்ளிக் கல்வி - RMSA திட்டத்தின்கீழ் தற்காலிகமாக ஒப்பந்த மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்கள் நியமனம்

    நியமனம் செய்யப்படும் பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும்.
    மணிநேர அடிப்படையில் (Hourly basis) நியமனம் செய்யப்படுகிறது.
    அதிகப்பட்சம் ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் மட்டும் தான் வேலை.   


    1. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 120/- வீதம். 


    2. பட்டதாரி ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 110/- வீதம்.


    3. தொழிற்கல்வி பயிற்றுனர்கள் (கலை, கைத்தொழில், இசை) ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 100/- வீதம்.


    4. ஆங்கில மொழி பேச்சுத்திறன்  ஆசிரியர்கள் - ஒரு பாடவேளைக்கு ரூ. 80/- வீதம்.


    அரசாணை எண். 5 , நாள். 09.01.2012 பதிவிறக்கம் செய்ய...

    Monday, January 23, 2012

    இன்று ( 23.1.2012 ) தலைமை செயலகத்தில் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் அவர்களை அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஆய்வுக்குழுவினர் சந்தித்து கலந்துரையாடினர்.

    INCOME TAX CALCULATION STATEMENT - AY 2012 - 12

    விலையில்லா காலணி மற்றும் புத்தக பைகள், கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில் வழங்குதல் குறித்து அரசாணை

    அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா காலணி வழங்குதல் - அரசாணை எண்.11, நாள். 18.1.2012

    அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஒரே மாதிரியான புத்தகப்பைகள், கற்றலுக்கு தேவையான கணித உபகரண பெட்டி, வண்ணப்பென்சில் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - அரசாணை எண்.12, நாள். 18.1.2012 


    1. அரசாணை எண்.11, நாள். 18.1.2012 பதிவிறக்கம் செய்ய....


    2. அரசாணை எண்.12, நாள். 18.1.2012 பதிவிறக்கம் செய்ய....




    Sunday, January 22, 2012

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 35604/A1/11, நாள்.12.1.2012.

          தொடக்கக்கல்வி துறையில் தற்காலிக பணியிடங்களுக்கு 1.1.2012 முதல் மூன்று மாதங்களுக்கு சம்பளம் பெற ஆணை நீடிக்கப்பட்டுள்ளது.

       இயக்குனர், முதன்மை கண்ணக்காளர், 366உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உட்பட தொடக்கக்கல்வி துறையில் மொத்தம் 1220 தற்காலிக பணியிடங்களுக்கு 31.3.2012 வரை  நீடிக்கப்பட்டுள்ளது.


    1 . தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 35604/A1/11, நாள்.12.1.2012  பதிவிறக்கம் செய்ய....
     2 .தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 35604/A1/11, நாள்.12.1.2012 (Nursery Posts) பதிவிறக்கம் செய்ய....

    புதிய பட்டதாரி பணியிடங்கள் தோற்றுவித்து முதல்வர் அறிவிப்பு.

    2009 - 10 தரம் உயர்த்தப்பட்ட 831 நடுநிலைப்பள்ளிகளில் தலா 1 பணியிடமும், 
    2010 - 11 தரம் உயர்த்தப்பட்ட 218 நடுநிலைப்பள்ளிகளில் தலா 2 பணியிடமும் சேர்த்து மொத்தம் 1267 பட்டதாரி பணியிடங்கள் தோற்றுவித்து முதல்வர் அறிவிப்பு.


    இந்த கல்வி ஆண்டிலேயே (2011 - 12) தோற்றுவிக்க மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவு.

    ஒரு நாள் ஊதியம் பிடித்தம் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.

    ந. க. எண். 1181 / பி1 / 2012, நாள். 20.1.2012 .

    1 . உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் அவர்களின் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ஒரு நாள் ஊதியத்தை காசாக்கிவேண்டி தனியாக உண்டியல் தயாரிக்க வேண்டும். 

    2 . மொத்த தொகைக்கு "மாண்புமிகு முதலமைச்சர் பொது நிவாரண நிதி" என்ற தலைப்பிற்கு வங்கி வரைவு (Draft) பெற வேண்டும்.

    3. வங்கி வரைவு மற்றும் ஊழியர்களின் பெயர் பட்டியல் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டும். 

    Saturday, January 21, 2012

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 13368/L1/11, நாள். .1.2012.

                தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு அவர்கள் 1.6.1988 முன்பு பணியாற்றிய இ.ஆ, தொ.ப.த.ஆ பணிக்காலம் சேர்த்து தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்து அரசாணை எண். 216க்கு தொடக்கக்கல்வி இயக்குனர் சில அறிவுரைகள் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுகொள்ளபடுகிறார்கள். 

    1. தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் விண்ணபங்களை(மூன்று நகல்களில் ) 31.1.2012க்குள்  சார்ந்த உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் பெறபடுதல் வேண்டும்.

    2. 29.2.2012க்குள்  இரண்டு நகல்கள் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.

    3. 31.3.2012க்குள் தொடக்ககல்வி இயக்குனரகத்தில் ஒப்படைப்பு செய்தல் வேண்டும்.


    நியாயவிலை கடைகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 ஞாயிற்றுக்கிழமைகள் திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவு.

       குடும்ப அட்டைகள் புதுப்பிக்க அரசு பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் தங்களது குடும்ப அட்டைகளை புதுபிக்க ஏதுவாக 22.1.2012, 29.1.2012, 5.2.2012 மற்றும் 12.2.2012 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் நியாயவிலை கடைகளை திறந்து வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.. 

    Friday, January 20, 2012

    INCOME TAX - ASSESSMENT YEAR 2012 - 13

    TAX RATES APPLICABLE TO INDIVIDUALS

    MALE                       -  Up to 180000    :    Nil
    FEMALE                  -  Up to 190000    :    Nil
    SENIOR CITIZEN  -   Up to 250000    :    Nil
    SUPER CITIZEN    -   Up to 500000     :    Nil

    குடியரசு தினவிழா கொண்டாடுதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குனரின் அறிவுரைகள்.


    ந. க. எண். 001064 / ஜே 3 / 2011, நாள். 12.1.2012

    1 . மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலங்களிலும் மற்றும் சார்நிலை அலுவலகங்களிலும் கொண்டாடப்படவேண்டும்.

    2 . 26.1.2012 அன்று காலை 8.30 மணியளவில் நம் தேசிய கொடி ஏற்ற வேண்டும்.

    3 . அனைத்து பணியாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.

    4 . பள்ளிகளில் மாணவர்களிடையே போட்டிகள்(கட்டுரை போட்டி,பேச்சு போட்டி,ஓவிய போட்டி, விளையாட்டு போட்டி) நடத்தி பரிசுகளை வழங்கவேண்டும். 

    5 . கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவேண்டும்.

    6 . அனைத்து பள்ளிகளில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க  வேண்டும்.      
    ந. க. எண். 001064 / ஜே 3 / 2011, நாள். 12.1.2012 பதிவிறக்கம் செய்ய...

    Thursday, January 19, 2012

    சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை அறிவிப்பு

    1 . இலவச மற்றும் கட்டண இருக்கையில் பயிலும் SC / ST மாணவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

    2  . பெற்றோர் / பாதுகாவலரின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    3 . மைய அரசின் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2011 - 12 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும்.

    "தானே புயல்" முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க கோரும் வழிமுறைகள் குறித்து அரசாணை வெளியீடு


    1. விருப்பம் உள்ள அரசு ஊழியர்கள்  ஜனவரி  மாத 2011 மொத்த சம்பளத்தில்  ஒரு நாள் கணக்கீடு செய்து  பிடித்தம்  செய்ய  வேண்டும்.

    2. ஊழியர்களால்  அளிக்கப்படும்  நிதி 100% வருமான  வரி  விலக்கு  அளிக்கப்படவேண்டும். 

    3. தொகுப்பூதியம்  பெறும்  ஊழியர்களும்   அளிக்கலாம்.

    4. ஊழியரின்  விருப்பத்தின்  பேரில்  மட்டும்  தான்   நிவாரண  நிதி பெறவேண்டும்.

    5. நிவாரண நிதி அளிக்கும்  ஊழியரிடம்  எழுத்துபூர்வமாக    கடிதம்  பெறவேண்டும். 

    அரசாணை 10,நாள்.19.1.2012 பதிவிறக்கம் செய்ய...

    வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலை பள்ளிகளின் வேலை நேரம் மாற்றம்.


           வேலூர் மாவட்ட தொடக்க / நடுநிலை பள்ளிகளின் வேலை நேரம் மாற்றம்.


    1. பிற்பகல் 1.30 க்கு பதிலாக இனி 1.45 க்கு தொடங்கி 4.30 வரை செயல்படும்.


    2. முற்பகல் வேலை நேரங்களில் மாற்றமில்லை. 

    Wednesday, January 18, 2012

    பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தக பை, கணித உபகரண பெட்டி, வண்ண பென்சில்கள் மற்றும் புவியியல் படங்கள் 2012 - 13 கல்வியாண்டு முதல் வழங்க முதல்வர் உத்தரவு.


    1. 1 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச இணை காலணி.

    2. 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச புத்தக பை.

    3. 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6,8,10 வகுப்புகளில் ஒரு கணித உபகரண பெட்டி.

    4. 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைபடங்கள்.

    5. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச வண்ண பென்சிலும் வழங்கப்படும்.


    6. 1 முதல் 8வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச இணை சீருடை.


    அரசு கடித எண். 45, நாள். 18.1.2012 மேலும் விவரங்களுக்கு.....

    Tuesday, January 17, 2012

    பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதம் ந. க. எண். 116750/BD1/E2/2011, நாள். 13.1.2012


    அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களின் ஆய்வு கூட்டம் 20.1.12 மற்றும் 21.1.12 தேதிகளில் சென்னை ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி இயக்கக்கத்தில் நடைபெற உள்ளது.

    தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந. க. எண். 031881/K3/11, நாள். 12.1.2012.

    இலவச சீருடை வழங்கும் திட்டம் 2012 - 13 வகுப்பு வாரியாக / அளவுவாரியாக மாணவ / மாணவியருக்கு சீருடைக்கான தேவைப்பட்டியல் கோருதல்.

    1.சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவ / மாணவியருக்கு அளவுவாரியாக தேவைப்பட்டியல் அளிக்கவேண்டும்.

    2.மாணவர்களுக்கு படிவம் " A " ல் அளிக்கவேண்டும்.

    3.மாணவியருக்கு  படிவம் " B " ல் அளிக்கவேண்டும்.

    4.20.1.2012குள் இயக்குனருக்கு தேவைப்பட்டியல் அளிக்கவேண்டும். 

    Monday, January 16, 2012

    மாநில திட்ட இயக்குனர் கடிதம் ந.க.எண்: 87 /அ5 / பயிற்சி /அகஇ/11 நாள் 16 .12 .11


    வேலூர் மாவட்டத்தில் - உயர்த்தொடக்கப் பள்ளிகளுக்கு - 6 , 7  & 8 வகுப்புகளுக்கான இருகட்டங்களாக மூன்று நாள் பாடப்பொருள் வலுவூட்டல்(CONTENT ENRICHMENT)  பயிற்சி.
    1 .  24 , 25  & 27 .01 . 2012  - தமிழ் , ஆங்கிலம், சமூகவியல் ஆசிரியர்களுக்கு 
    2 . 30 , 31  & 01 .02 .2012 - கணிதம், அறிவியல் ஆசிரியர்களுக்கு


    திருவண்ணாமலை மாவட்டத்தின்  - உயர்த்தொடக்கப் பள்ளிகளுக்கு - 6 , 7  & 8 வகுப்புகளுக்கான மூன்றுகட்டங்களாக  மூன்று நாள் பாடப்பொருள் வலுவூட்டல்(CONTENT ENRICHMENT)  பயிற்சி.
    1 . 18, 19  & 20 .01 . 2012  - தமிழ் , ஆங்கிலம் பாட ஆசிரியர்களுக்கு 
    2 . 23, 24  & 25 .01 .2012 - கணிதம், சமுகஅறிவியல் ஆசிரியர்களுக்கு 
    3 . 27, 28  & 30 .01 .2012 - அறிவியல் ஆசிரியர்களுக்கு 
    ( இப்பயிற்சி தேதிகள் மற்ற மாவட்டங்களில் மாறலாம்) 


    Friday, January 13, 2012

    தொடக்ககல்வி இயக்குனரின் பொங்கல் வாழ்த்து செய்தி

    அன்பார்ந்த அய்யா / அம்மையீர், 
    வணக்கம். 
                        தங்களுக்கும், தங்கள் குடும்பதார்க்கும் எனது மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்துக்கள். தங்களும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் அனைத்து நலன்களையும் பெற்று இன்புற்று வாழ இறைவனை வேண்டுகிறேன். 
    நல்வாழ்த்துகளுடன் 
                                             ( ஆ. சங்கர் )
                                              இயக்குனர்.
    அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். எல்லாம் வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
    சட்டமன்ற பேரவை செயலகம் - அரசு உறுதிமொழி குழு ( 2011 - 12 ) 13.1.2012 வெள்ளிக்கிழமை அன்று வேலூர் மாவட்டத்தில் ஆய்வு பயணம் மேற்கொள்ள உள்ளது.

    1 . நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் குறித்து ஆய்வு செய்தல்.

    2 . 2001 - ௦௦02 முதல் 2008 - 09 வரை தொடங்கிய SSA புதிய தொடக்கப்பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை ஆய்வு செய்ய உள்ளது.

    Wednesday, January 11, 2012

    ANIMAL WELFARE MESSAGE - GOVT. LETTER & DIRECTOR PROCEEDING

    1.To Download Govt.letter & Proceedings 2.To Download Animal Welfare Messages

    அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 34 விரிவுரையாளர்கள் பணிக்கான தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டி தேர்வு மூலம் நிரப்பபடவுள்ளது. 
    1 . விண்ணப்பம்  விலை : ரூ. 50/- 
    2 . விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.1.2012 - மாலை 5.45 வரை 
    3 . விண்ணப்பம் கிடைக்கும் இடம் : அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் .   
    4 . போட்டி தேர்வு தேதி :மார்ச் மாதம் 4 ந் தேதி.

    Tuesday, January 10, 2012

    FREE SMS REGISTRATION

    ஓய்வூதியதரர்களுக்கு மருத்துவ நிதிக்கான சந்தா தொகை உயர்த்தி அரசாணை வெளியீடு

    RMSA திட்டத்தில் 710 உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டதனால் நிலையிறக்கம் பெற்ற தொடக்கப்பள்ளிகளுக்கு தொ.ப.தலைமை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படவுள்ளது. இது குறித்து நாளை 12.1.2012 சென்னையில் நடைபெறவுள்ள மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாதாந்திர கூட்டத்தில் விவரம் கோரப்பட்டுள்ளது.

    DIRECTORATE OF TECHNICAL EDUCATION(POLYTECHNIC) RESULTS - OCT 2011

    Sunday, January 8, 2012

    BONUS CLARIFICATION - GOVT. LETTER NO.1753(FIN.)2010-1,DATED.14.1.2010

    ஒரு அரசு ஊழியர் 6மாதம் அல்லது அதற்கு மேல் " C " பிரிவின் கீழ் பணிபுரிந்து மீதி பணிக்காலம் " B " பிரிவின் கீழ் பணிபுரிந்தால் அவருக்கு முழு மிகை ஊதியம் வழங்க வேண்டும். To Download Govt. Letter Click Here... உதாரணமாக ஒருவர் 6 மாதம் (அ) அதற்குமேல்  இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த பின்னர் பதவி உயர்வு மூலம் இடைநிலை தலைமை ஆசிரியராகவோ (அ) பட்டதாரி ஆசிரியராகவோ பதவியேற்பின் அவருக்கு முழு மிகை ஊதியம் வழங்க வேண்டும்.  

    Saturday, January 7, 2012

    உதவி தொடக்கக்கல்வி அலுவலர் போட்டி தேர்வு பிப்ரவரி மாதம் 19ந் தேதிக்கு தள்ளிவைப்பு.  வரும் 8ந் தேதி நடக்கவிருந்த போட்டி தேர்வு தள்ளிவைத்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.