ம.தி.மு.க.,வில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார். இத்தகவல் அ.தி.மு.க., தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று காலை நேரில் சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவர் அ.தி.மு.க., கட்சியில் இணைந்து அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டையையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவை இன்று காலை நேரில் சந்தித்தார் நாஞ்சில் சம்பத். அப்போது அவர் அ.தி.மு.க., கட்சியில் இணைந்து அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டையையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
விலகலில் முடிந்த மோதல் : கடந்த 6 மாத காலமாக வைகோவுடனான நட்பில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கட்சிப் பணிகளில் இருந்து விலகியிருந்தார் நாஞ்சில் சம்பத். கட்சி மேலிடம் தன்னை ஒதுக்கி வைப்பதாகவும், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தான் இதற்கு காரணம் என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வந்தார்.
இந்நிலையில் அவர் இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்துள்ளது, வைகோவுடனான மோதல் எதிரொலி என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே அ.தி.மு.க., கூட்டணியில் ம.தி.மு.க., இருந்த போது தேர்தல் நேரங்களில் அ.தி.மு.க.,விற்காக உணர்ச்சி பொங்க பல மேடைகளில் பிரசாரம் செய்திருக்கிறார் நாஞ்சில் சம்பத். அந்த அடிப்படையில் பழைய இணக்கத்தின் காரணமாக அவர் அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
வைகோவுடனான விரிசலுக்குப் பின்னர் நாஞ்சில் சம்பத் தி.மு.க., வில் இணைவார் என பெரிதும் ஊகிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் இன்று அ.தி.மு.க.,வில் இணைந்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.