தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, வாழ்க்கையைத் தீர்மானிக்கும்" என தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பேராசிரியர் கண்ணன் கூறினார்.
தினமலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு, அறிவுரை வழங்கியும், உற்சாகப்படுத்தியும் பேராசிரியர் கண்ணன் பேசியதாவது:
ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சிக்கு மாணவர்கள், அலைகடலென குவிந்துள்ளனர். இது, கல்வி திருவிழாவாக இங்கு நடக்கிறது. உள்ளே வரும் மாணவர்கள், வெளியே சொல்லும் போது, அதிக மதிப்பெண் பெறும் வித்தையை, கற்று செல்வர். தேர்வு எழுதும் மாணவர்கள், திட்டமிட்டு படிக்க வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற திட்டமிடுதல் அவசியம். உங்கள் இலக்கு எது என்பதை, முதலில் முடிவு செய்யுங்கள். அப்போது தான் இலக்கை நோக்கி, சரியாக பயணம் செய்ய முடியும்; வெற்றியின் உச்சத்தையும் அடைய முடியும். மாணவர்கள் பாடங்களை கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படிக்க வேண்டும்.
90 நாள்கள் மட்டுமே, இந்த கடினமான உழைப்பு என்பதால், ஒவ்வொரு மணி நேரத்தையும், பொன்னான நேரமாக எண்ணி பயன்படுத்த வேண்டும். எந்த பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுக்கிறோமோ, அந்த பாடத்தில் அதிக கவனம் செலுத்தி, படிக்க வேண்டும். கணித சூத்திரங்ளை தினமும் எழுதி பார்க்க வேண்டும்.
தேர்வு நேரங்களில், "டிவி", திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். போன காலங்கள் திரும்ப வராது. எனவே, இருக்கும் நாட்கள் முழுவதையும், படிப்பிற்காக பயன்படுத்த முன்வர வேண்டும். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் வழங்கிய ஆலோசனைகள், குறிப்புகள் கவனத்தில் கொண்டு படித்தால், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மட்டுமே, உங்கள் வாழ்க்கையை தீர்மானிக்கும். இவ்வாறு, கண்ணன் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.