Pages

Saturday, December 29, 2012

முதுகலை பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்களுக்கான முக்கிய குறிப்புகள்

* ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான  கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் நடைபெறும் கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான  கலந்தாய்வு அன்று பிற்பகல் தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடத்தப்படும்.


* முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.

* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு,  கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் தவறாமல் கலந்து கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.

* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்.

4 comments:

  1. Thanks for ur information.We feel happy.

    ReplyDelete
  2. what happen botany final list,

    ReplyDelete
  3. Dear, TN Kalvi..

    //கலந்தாய்வினை ஆசிரியர் தேர்வு வாரிய வரிசை எண்ணின் அடிப்படையில் நடத்தப்படும்.//

    வரிசை எண் என்றால் என்ன.? மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடக்காதா..? கலந்தாய்வு நடைபெறும் முறையை சற்று விரிவாக கூறுங்கள்..

    ReplyDelete
  4. கலந்தாய்வு தொடர்பாக அழைப்பு கடிதம் CEO ஆபிஸ் மூலம் எனது வீட்டிற்கு வந்துவிட்டது...எல்லா புகழும் இறைவனுக்கே..மிக்க மகிழ்ச்சி..கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.