Pages

Friday, December 21, 2012

டிசம்பர் 27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலந் தழுவிய பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வவேண்டும். 2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்கு கட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கி்ன்றனர் என கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.

1 comment:

  1. earganave niamanam seitha mudugali pattathaari asiriargal pathi per velaiel seravilai.After two months Now trb is sending cancellation order.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.