இனி ஒரு நாளில் 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும். இதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு ஒரு நாளில் ஒரு மொபைலில் இருந்து 200 எஸ்.எம்.எஸ்., மட்டுமே அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு
வந்தது. ஆனால் ஆணையத்தின் இந்த முடிவுக்கு டில்லி ஐகோர்ட் தடை விதித்தது. கட்டுப்பாடு தனி மனிதனின் சுதந்திரத்தில் தலையிடுவது போல் உள்ளதாக டில்லி ஐகோர்ட் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில், சிவசேனா கட்சியின் ஆதித்யா தாக்கரே தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் மீண்டும் எஸ்.எம்.எஸ்., கட்டுப்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.