தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதிக்குப் பதில் ஜனவரி 27ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துணை ஆட்சியர், காவல் துறை துணை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர்,மாவட்ட பதிவாளர் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 1 முதனிலைத் தேர்வு டிசம்பர் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 6ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 24 ஆகவும் வரும் ஜனவரி 27ம் தேதி தேர்வு நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தாங்கள் விண்ணப்பித்த நாளிலிருந்து இரண்டு தினங்களுக்குள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.