Pages

Sunday, November 25, 2012

மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: முதலமைச்சர் வழங்கினார்

பள்ளி மாணவ, மாணவியருக்கு, சிறப்பு ஊக்கத் தொகை, நிரந்தர வைப்பு நிதி, ஸ்மார்ட் கார்டு ஆகிய திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார். 2011-12ம் கல்வியாண்டில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, 4.60 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
பள்ளிக் கல்வித் துறைக்கான, கல்வி தகவல் மேலாண்மை முறை, இந்தாண்டு செப்டம்பர் மாதம் துவக்கப்பட்டது. இதில், நான்கு இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்கும் இணையதளம் உள்ளது. இதில், அனைத்து விவரங்களும் பதிவேற்றப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களைக் கொண்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு &' வழங்க முதல்வர் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஸ்மார்ட் கார்டுகளை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி, திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்த ஸ்மார்ட் கார்டில், மாணவ, மாணவியரின் பெயர், பெற்றோர் முகவரி, அவர்கள் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். இடம் பெயரும் மாணவ, மாணவியர், வேறு பள்ளிகளில், இதன் மூலம் எளிதில் சேரலாம்.
இந்த திட்டத்தின் மூலம், 92 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறுவர். மேலும், அவர்களின் உடல் நலம் குறித்த விவரங்கள் பதியப்படும், "ஹெல்த் கார்டு&' உடன், "ஸ்மார்ட் கார்டு&' ஒருங்கிணைக்கப்படும்.

இக்கார்டு படிப்படியாக அனைத்து பள்ளி மாணவ, மாணவியருக்கும் வழங்கப்படுகிறது. "ஸ்மார்ட் கார்டு&' திட்டம் தவிர, 2011-12ம் கல்வியாண்டில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்ற, 4.60 லட்சம் மாணவ, மாணவியருக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.

இதில், 10 மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவியருக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, 2,000 ரூபாயும், அவர்கள் பெயரில், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டு, பிளஸ் 2 முடிக்கும் போது, வட்டியுடன் வழங்கப்படும். இந்த கல்வியாண்டில், 21.52 லட்சம் மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், 353 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மாணவ, மாணவியரின் தாய், தந்தையர் விபத்தில் இறந்தாலோ, நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, அவர்கள் குழந்தைகளின் கல்விச் செலவு, பராமரிப்பு செலவிற்காக, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்த வைப்பு நிதியாக வழங்கப்படும் என்ற திட்டம் உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், கடந்த மற்றும் இந்த கல்வியாண்டுகளில், 720 மாணவ, மாணவியருக்கு, 3.60 கோடி ரூபாய்க்கான வைப்பு நிதி பத்திரங்களையும், தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.