Pages

Wednesday, November 21, 2012

கல்வித்துறை சார்ந்த அமைச்சுப்பணியாளர்கள் ஆசிரியர்கள் ஆவதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு இணையதள மூலம் நடத்த உத்தரவு.

முதுகலையுடன் பி.எட்., முடித்த கல்வித்துறை பணியாளர்களை, ஆசிரியர்களாக நியமிக்கும் "ஆன் லைன் கவுன்சிலிங்" நவம்பர் 21ல் நடக்கிறது. பட்டதாரி, முதுகலை பி.எட்., முடித்து, கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு, சர்வீஸ் அடிப்படையில் 2 சதவீதம் பேர்களை ஆசிரியர்களாக நியமிக்கும் அரசு உத்தரவு 6 மாதத்திற்கு முன்பு அமலானது. இதன்மூலம் ஓய்வு பெற 5, 7 ஆண்டுகளே உள்ள நிலையில், சிலருக்கு பள்ளியில் பாடமெடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், தகுதியுள்ள முதுகலை பி.எட்., பட்டதாரிகளுக்கு சீனியாரிட்டிப்படி அந்தந்த முதன்மை கல்வி அலுவலகங்களில் ஆன்லைனில் இன்று (நவ.,21) நியமன கவுன்சிலிங் நடக்கிறது. ஒருசில மாவட்டங்களில் இரு சதவீத ஒதுக்கீட்டிற்கு ஆட்கள் இல்லாத நிலையில், சிவகங்கையில் இருவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை பணியாளர் சங்கம் சார்பில், போராடி 2 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றோம். 100 காலியிடத்தில் 2 என்பது குறைவு. 5 ஆக அதிகரித்தால் ஆசிரியராகும் வாய்ப்பு பலருக்கு கிட்டும்,&'&' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.