Pages

Friday, November 23, 2012

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி

கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமன ஆணையில் TET தேர்வில் 5 ஆண்டுக்குள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
 
இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - என்ற தினகரன் செய்தியால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் Posting நிலைக்குமா என்று குழப்பம் அடைந்துள்ளனர்.

      TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளியிலயே வேலை வாய்ப்பு கிடைக்கும் போது அரசு நிதி உதவி பள்ளி பணியை  ஆசிரியர்கள் விரும்ப மாட்டார்கள்.

     இதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால்  மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

      இது குறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இது மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால் விரைவில் கல்வி துறை இயகுனரகம் மூலம் தெளிவுரை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.