Pages

Thursday, November 29, 2012

உடற்கல்வி ஆசிரியர்: டிச., 07ம் தேதி பணி நியமன கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2010-11 மற்றும் 2011-12ம் ஆண்டிற்கு தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 47 பணிநாடுநர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்திட ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஒதுக்கீடு பெறப்பட்டு, ஆதிதிராவிடர் நலத்துறையால் அழைப்பாணை அனுப்பப்பட்ட 47 பணி நாடுநர்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 07ம் தேதி  முற்பகல் 11.00 மணிக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம், எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம் சென்னை-5 என்ற முகவரியில் ஆணையர் தலைமையில் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடைபெறும். மேற்கண்ட நாளில் சம்பந்தப்பட்ட பணிநாடுநர்களை உரிய சான்றுகளுடன் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.