Pages

Monday, October 8, 2012

விரிவுரையாளர் தகுதி தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த, விரிவுரையாளர் தகுதி தேர்வில், 58 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அரசு கல்லூரிகளில், காலியாக உள்ள விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப, மாநில அளவிலான தகுதித் தேர்வு, (செட்) நேற்று நடந்தது. இத்தேர்வை எழுத, இணையதளம் மூலம், 65 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.
இதில், 58 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டது. மூன்று பிரிவுகளாக நடந்த தேர்வில், பெண்களே அதிக அளவில் பங்கேற்றனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு, மாநிலம் முழுவதும் நேற்று நடந்தது. இதற்கென, மாநிலம் முழுவதும், 76 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

தேர்வு குறித்து, முதன்மை செயலர் ஸ்ரீதர் கூறுகையில், "அதிகபட்சமாக சென்னையில், 12 மையங்களில், 10,508 பேர் தேர்வு எழுதினர். திருச்சியில், 9,812 பேரும், சேலத்தில், 7,344 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும்" என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.