Pages

Monday, October 1, 2012

மழைக்கால அவசர உதவிக்கு தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தில் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். அவ்வாறு பருவமழைக் காலங்களில் பெய்யும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர்
தேங்கி, சுற்றுப்புற குடியிருப்புப் பகுதிகள் நீரால் சூழப்படுகிறது. இவ்வாண்டில் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், வடகிழக்கு பருவமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டாலோ அல்லது இதர பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டாலோ, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கட்டணமில்லாத தொலைபேசி எண் 1077 -இல் தொடர்பு கொண்டும், மேலும் கடலோர பாதுகாப்பு தொடர்பாக உதவி பெற விரும்புவோர் சென்னையில் உள்ள, இயக்குநர், தமிழக காவல் துறை அலுவலக வளாகத்தில் உள்ள கட்டணமில்லாத தொலைபேசி எண்.1033-ல் தொடர்பு கொண்டும் உரிய தகவல்களை தெரிவிக்குமாறும், இதன் மூலம் பெறப்படும் தகவலைக் கொண்டு உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை ஆட்சித்தலைவர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.