Pages

Sunday, October 28, 2012

பணிமாற்றம் கிடைக்காததால் ஆசிரியை தற்கெலை

உடன்குடியில் பள்ளி ஆசிரியை இடமாற்றம் கிடைக்காததால் விரக்தி அடைந்து அளவிற்கு அதிகமான மாத்திரை தின்று பரிதாபமாக இறந்தார்.உடன்குடியில் சத்யா நகரை சேர்ந்த விஜயசங்கர் இவரது மனைவி முருகேஸ்வரி(40). இவர் ஆசிரியராக வேலூரில் பணியாற்றி வருகிறார்.
இவர்களுக்கு ஜானு என்ற மகளும், மாதேஷ் என்ற மகனும் உள்ளனர். குழந்தைகள் மற்றும் கணவரை பிரிந்து வேலுரில் வேலை பார்ப்பதால் உடன்குடி அருகே தன் வேலையை மாற்றுவதற்காக முயற்சி மேற்கொண்டு வந்தார்.

ஆனால் இடமாற்றம் கிடைக்காததால் தசரா திருவிழாவிற்கு வந்த ஆசிரியை குழந்தைகளை விட்டுவிட்டு ஆசிரியர் பணிக்கு போக மனமில்லாததால் சம்பவதன்று இரவில் இவர் பிரஸ்ஸார் மாத்திரையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உயிருக்கு போராடிய இவரை உடனடியாக தூத்துக்குயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து இவர் கணவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. தவறான முடிவை தேடிவிட்டாயம்மா.... எந்த குழந்தைகளையும் கணவனையும் பிரிய மனமில்லாமல் வேலை செய்து கொண்டு இருந்தாயோ, அதே பிள்ளைகளையும் கணவனையும் விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டாயே...இதற்காக வேலையை இழந்திருந்தாலும் பரவாயில்லையே

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.