Pages

Wednesday, October 17, 2012

கல்வித்துறையில் தகவல் மேலாண்மை: டிசம்பரில் ஆன்லைன் முறை

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது.

வட்டார மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவம்பர் 30ம் தேதிக்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, www.tn.nic.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் www.communication.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.