Pages

Saturday, October 6, 2012

இரட்டைக் கல்வி முறையை ஒழிக்க வேண்டும்

நம் நாட்டில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் காட்டும் இரட்டைக் கல்வி முறையை ஒழிக்க வேண்டும் என கல்வி குழு துணைத் தலைவரும், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய பொதுச் செயலருமான ஈஸ்வரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது : நாடு முழுவதும் கல்விக் கொள்கையில் பல வித்தியாசங்கள் உள்ளன. இரட்டை நிலை கல்வியை ஒழித்து, பொது நிலை கல்வி தேவை. அதன் மூலம் தகுதி வாய்ந்த மாணவர்கள், வாழ்க்கையில் வளம் பெறலாம். குறைந்த மதிப்பெண் எடுக்கும் பணக்கார மாணவர்கள், மருத்துவம் படிக்கலாம்; அதிக மதிப்பெண் எடுத்த ஏழை மாணவர்களால், அதிக பணம் செலவு செய்து மருத்துவம் படிக்க முடியாத நிலை உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில், கட்டடங்களை வழங்கி, அதில், 25 ஏழை மாணவர்களுக்கு இடமளிக்க வலியுறுத்தும் மத்திய அரசின் முடிவு நியாயமற்றது.

மாறாக, அரசுப் பள்ளிகளை, தனியாருக்கு இணையாகக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு நிகரான சம்பளம் இல்லை; இதில், 7,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.