Pages

Sunday, October 28, 2012

மத்திய அமைச்சரவை மாற்றியமைப்பு

பரபரப்பான அரசியல் திருப்பங்களுடன் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. 7 பேர் கேபினட் அந்தஸ்துடனும்,22 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். மிகவும் எதிர்பார்த்த ராகுல் அமைச்சரவையில் இடம் பெறவில்லை. நடிகர் சிரஞ்சீவி தனிப்பொறுப்புடன் அ‌மைச்சரானார்.வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் நிலையில் இன்று பெருமளவு மத்திய மந்திரிசபை மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரிய அளவில் மத்திய மந்திரிசபை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, அடுத்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மத்திய அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்யக் கூடாது என, நினைக்கிறேன். இது கடைசி மாற்றமாக இருக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்து பேசினார். அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தலில் பிரணாப் முகர்ஜி போட்டியிட்டதால், அவர் வகித்த நிதி அமைச்சர் பதவியை ராஜினமா செய்தார். அதே நேரத்தில் மத்திய அமைச்சராக இருந்த வீரபத்ரசிங் ஊழல் புகாரில் சிக்கி ராஜினாமா செய்தார்.

இதையடுத்து மத்தியில் காங். கூட்டணிக்கு ஆதரவு அளித்த வந்த திரிணாமுல் காங். வெளியேறிதால் அக்கட்சியின் 6 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் சிறிய அளவில் மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டு, நிதிஅமைச்சராக சிதம்பரமும், உள்துறை அமைச்சராக சுஷில்குமார் ஷிண்டே, மின்துறை அமைச்சராக வீரப்ப மொய்லியும் , மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த சூழ்நிலையில் இன்று பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 22 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். அதற்கு முன்னதாக மூத்த அமைசசர்கள் எஸ்.எம்.கிருஷ்ணா, அம்பிகாசோனி உள்ளிட்ட 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
புதிய அமைச்சரவையில் பதவியேற்றவர்கள் விவரம் வருமாறு:

கேபினட் அமைச்சர்கள்:

1) ரஹ்மான்கான் (சிறுபான்மையினர் விவகாரம் )

2) தின்ஷாபட்டேல் (சுரங்கத்துறை )
3) அஜெய்மக்கான், (வீட்டுவசதி, ஊரக வறுமை ஒழிப்பு )

4) பல்லம் ராஜூ, ( மனித வள மேம்பாட்டுத்துறை )

5) அஸ்வினிகுமார் (சட்டம், நீதி )

6) ஹரீஷ்ராவத் (நீர்வளத்துறை )

7) சந்திரேஷ்குமாரி கடோஜ் (கலாச்சாரத்துறை )

தனிப்பொறுப்பு

1) மணீஷ்திவாரி (தகவல் ஒளிபரப்புத்துறை )
2) சிரஞ்சீவி (சுற்றுலாத்துற )

இணை அமைச்சர்கள்:

1) சசி தரூர் (மனித வள மேம்பாட்டுத்துறை ).
2) கோடி குனில் சுரேஷ (தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை
3) தாரிக் அன்வர் (வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை )
4) ஜெயசூரிய பிரகாஷ் ரெட்டி (ரயில்வே )
5) ராணி நாரா (பழங்குடியினர் நலம் )
6) அதிர் ரஞ்சன் செளத்ரி (ரயில்வே )
7) அபு- கசிம்கான் ‌சவுத்ரி (சுகாதாரம், குடும்ப நலத்துறை )
8) சர்வே சத்யநாராயணா (நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்து)
9) நினாங் எரிங், (சிறுபான்மையினர் நலம் )
10) தீபாதாஸ் முன்ஷி (ஊரக மேம்பாட்டுத்துறை)
11) போரிகா பல்ராம் நாயக் (சமூக நீதி
12) கிருபாராணி கில்லி (தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை )
13) லால்சந்த் கட்டாரியா(ராணுவம் ).

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.