Pages

Tuesday, October 30, 2012

மாதம் ரூ.500 உதவித் தொகை: மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய மாணவ, மாணவியருக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகையாக மாதம்தோறும் ரூ.500 வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியுண்டு.

அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2011-12ஆம் கல்வியாண்டில் 7-ம் வகுப்பு பயின்று முழுஆண்டுத் தேர்வில் எஸ்சி, எஸ்டி மாணவ, மாணவியர் 50 சதவீத மதிப்பெண்களும், பிற மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

என்.எம்.எம்.எஸ். தேர்வு முறையில் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளம் மூலம் 1.11.12 முதல் 9.11.12 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் தேர்வுக் கட்டணமாக ரூ.50 செலுத்தி 9.11.12-க்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு நடைபெறும் நாள் 30.12.12.

தேர்வு முறை:

இத்தேர்வு இரு பகுதிகளை கொண்டது. பகுதி 1 மனத்திறன் தேர்வும், பகுதி 2 படிப்பறிவுத் தேர்வும் கொண்டது. ஒவ்வொரு தேர்வும் தலா 90 நிமிடங்கள் நடக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.

பாடத் திட்டம்:

படிப்பறிவுத் தேர்வுப் பகுதியில், இக்கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பில், முதல் மற்றும் 2-ம் பருவத்துக்கான பாடப் பகுதியில் மற்றும் இரண்டாம் பருவத்துக்கான பாடப் பகுதியிலிருந்து மட்டுமே வினாக்கள் கேட்கப்படும்.

இப்பகுதியில் அறிவியல் 35, கணிதம் 20, சமூக அறிவியல் 35 ஆக 90 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவ, மாணவியருக்கு வரும் கல்வியாண்டு (2013-14) முதல் மாதம்தோறும் ரூ.500 படிப்பு உதவித் தொகை வழங்கப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.