Pages

Friday, October 12, 2012

அறிவியல் செய்முறை பயிற்சி: பதிவு செய்ய அக்டோபர் 31 இறுதிநாள்

அடுத்த ஆண்டு, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, தனி தேர்வாக எழுத விரும்பும் தேர்வர், அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், நேரடியாக, பத்தாம் வகுப்பு தனி தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு வசதியாக, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிவு செய்ய, ஏற்கனவே பலகட்ட வாய்ப்புகள் தரப்பட்டன.

எனினும், கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகளில், மாணவ, மாணவியர் பங்கேற்க வசதியாக, இம்மாதம், 15ம் தேதி முதல், 31ம் தேதி வரை பதிவு செய்யலாம்; இதுவே, இறுதி வாய்ப்பு.

தேர்வுத்துறை இணையதளங்களில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து, சம்பந்தபட்ட மாவட்ட கல்வி அலுவலர்களிடம், 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.