Pages

Friday, October 19, 2012

கல்வி உதவித்தொகை: டிசம்பர் 30ல் போட்டித் தேர்வு

மத்திய அரசின் கல்வி உதவி தொகைக்கான போட்டி தேர்வு, வரும், டிசம்பர் 30ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் நவம்பர் 1ம் தேதி முதல், தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், போட்டி தேர்வு, அனைத்து கல்வி மாவட்ட தலைநகரங்களில் நடக்கும். இதற்கான விண்ணப்பங்களை, நவம்பர் 1ம் தேதி முதல், 9ம் தேதி வரை இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பு கல்வியாண்டில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர், இத்தேர்வில் பங்கேற்கலாம். மாணவரின் பெற்றோர் ஆண்டு வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

தேர்வெழுத தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு, ஏழாம் வகுப்பு, முழு ஆண்டு தேர்வில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவர், 50 சதவீத மதிப்பெண்களும், இதர பிரிவு மாணவ, மாணவியர், 55 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பத்தில், புகைப்படத்தை ஒட்டி, தேர்வு கட்டணம், 50 ரூபாய் உடன், பள்ளி தலைமை ஆசிரியரிடம், விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு, இரு பகுதிகளை கொண்டது. பகுதி ஒன்றில், மனத்திறன் தேர்வு; பகுதி இரண்டில், படிப்பறிவு தேர்வு. ஒவ்வொரு பகுதிக்கும், தலா, 90 நிமிடங்கள் வழங்கப்படும். படிப்பறிவு தேர்வில், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் இருந்து, கேள்விகள் கேட்கப்படும்.

அறிவியலில், 35 கேள்விகள், கணிதத்தில், 20, சமூக அறிவியலில், 35 என, 90 கேள்விகள் கேட்கப்படும். தலா, 1 மதிப்பெண்கள். மனத்திறன் தேர்வுக்கு, பாடப் பகுதி கிடையாது. இப்பகுதியிலும், 90 கேள்விகள் கேட்கப்படும். இவ்வாறு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.