பிளஸ் 2 தனித்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல்லில் துவங்கியது. இம்மாதம் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களுக்கு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு அக்.,30ம் தேதி வரை நடக்கும்.
600க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதிப்பீடு செய்யும் பணி முடியும் வரை பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளனர். விரைவில் இப்பணிகள் முடிவடைந்து விடைகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.