Pages

Sunday, October 28, 2012

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000/- க்கான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பும் பணி நிறுத்தி வைக்க மாநில திட்ட அலுவலகம் உத்தரவு.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளிக்கும், பராமரிப்பு நிதியாக, 5000 ரூபாய், வளர்ச்சி நிதியாக, 5,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம் ரூ.10000/-மும் அதிகபட்சம் ரூ.15000/-மும் வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பாக ரூ.2000 /- க்கான
கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் மாநில அளவில் வாங்க வரைவோலை எடுத்து அனுப்பும் பணி நிறுத்தி வைக்க மாநில திட்ட அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் இதற்கான காரணம் தெரியவில்லை. ஏற்கெனவே மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து வரைவோலைகள்  சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு அனுப்பி இருந்தால் அதையும் திருப்பி அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.