Pages

Thursday, October 18, 2012

பள்ளிக்கல்வித்துறை - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஆன்லைன் வழியாக 19.10.2012 மற்றும் 20.10.2012 அன்று நடைபெற உள்ளது.

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் (17.10.2012 அன்று உள்ளவாறு) பதிவிறக்கம் செய்ய...

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களின் முன்னுரிமைப் பட்டியல் (17.10.2012 அன்று உள்ளவாறு) பதிவிறக்கம் செய்ய... - CORRECTED PANEL

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு ஆன்லைன் கவுன்சிலிங், அக்டோபர் 19, 20ம் தேதிகளில் நடக்கவுள்ளதாக, பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றும் 430 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு
வழங்கப்படவுள்ளது. இதற்கான ஆன் லைன் கவுன்சிலிங், அக்டோபர் 19, 20 ம் தேதிகளில் நடக்கவுள்ளது. பதவி மூப்பு அடிப்படையில், எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 19ம் தேதி காலை 9 முதல் 12.30 மணி வரை, 967 முதல் 1116 எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1117 முதல் 1216 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கிறது.

அக்டோபர் 20ம் தேதி காலை 9 முதல் மதியம் 12.30 மணி வரை, 1217 முதல் 1366 வரை எண் உள்ளவர்களுக்கும், பிற்பகல் 1.30 முதல் மாலை 5 மணி வரை, 1367 முதல் 1466 வரை எண் உள்ளவர்களுக்கும் நடக்கவுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.