Pages

Wednesday, October 10, 2012

ஓய்வூதியத் துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழக அரசு ஊழியர்கள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியம், காப்பீடு பொதுத்துறையில் அன்னிய முதலீடுக்கு அனுமதியளித்த மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன பொது செயலாளர் முத்துசுந்தரம், மாநில செயலாளர் அன்பரசு பேசினர்.

எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு பகுதி குழு தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் வெற்றிராஜன், மாவட்ட செயலாளர் டேனியல்ஜெயசிங் பேசினர். வணிகவரித்துறை அலுவலகத்தில் பகுதி குழு செயலாளர் சந்திரன் தலைமையிலும், கிண்டி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பகுதி குழு தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையிலும், டிபிஐ அலுவலகத்தில் பகுதி குழு பொருளாளர் வினோத் தலைமையிலும் ஆர்ப் பாட்டம் நடந்தது.  கலெக்டர் அலுவலகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.