மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்
பள்ளிகளிலும் நடைபெற இருக்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில்
மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு அதிகரிக்கவும் மாணவர்கள் மாவட்ட மற்றும்
மாநில அளவில் உயர் மதிப்பெண்கள் பெறவும் உதவிடும் வகையில் கீழ்க்காணும்
அறிவுரைகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன.
• 10ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் பெறும் பாடவாரியான மதிப்பெண்கள் எப்போதும் தலைமையாசிரியர் பார்வையில் இருக்க வேண்டும்.
• குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் என்ற வகையில் மாணவர் பட்டியல் தனித்தனியே ஒவ்வொரு தேர்வுக்கும் தயாரிக்கப்பட வேண்டும்.
• மூன்று வகையான மாணவர்களுக்கும் தனித்தனி கவனம் செலுத்தப்பட வேண்டும்.
• மாணவர்களுக்கு அந்தந்த பாடங்களில் அலகு தேர்வுகள் (Unite Tests) நடத்தப்பட்டு உடனடியான திருத்தப்பட்டு மாணவர்களுக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட வேண்டும்.
• தேர்ச்சியில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
• ஒவ்வொரு தேர்விலும் ஒவ்வொரு பாடத்திலும் உயர்ந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு வழிபாட்டுக் கூட்டத்தின் போது சிறுசிறு பரிசுகள் வழங்கலாம்.
• எந்த பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்வி அடைகிறார்களோ சிறப்பு கவனம் எடுத்து சொல்லித்தர வேண்டும்.
• மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த, Blue Print -ன் படி எனிமையாக, அதிக மதிப்பெண் பெறும் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தி, பயிற்சியளிக்கலாம்.
இவ்வாறு மாணவர்களை ஊக்கப்படுத்தலாம் என்று தலைமையாசிரியர்களுக்கு மாநிலத் திட்ட இயக்குநர் ஆலோசனைகள் வழங்கினார்.

No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.