Pages

Thursday, October 4, 2012

10ம் வகுப்பு தனித்தேர்வு: தத்கால் திட்டம் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு, தத்கால் திட்டத்தை, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.தத்காலில் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவியர், 12, 13 ஆகிய தேதிகளில், குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்று, "ஹால் டிக்கெட் பெறலாம்.
பத்தாம் வகுப்பு தனித்தேர்வு, விரைவில் துவங்க உள்ளது. இத்தேர்வை எழுத விரும்பும் மாணவ, மாணவியர், "தத்கால்' திட்டத்தின் கீழ், 5ம் தேதி முதல், 8ம் தேதி, பகல் 1 மணி வரை, தேர்வுத் துறை இணையதளத்தில் பதிவு செய்து, 625 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

இணையதளம் வழியாக, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தில், மற்றொரு புகைப்படம் ஒட்டி, தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்று, உரிய இணைப்புகளுடன், தேர்வுத் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில், 9ம் தேதி வரை, விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். முழுமையான விவரங்களுக்கு, இணையதளத்தைப் பார்க்கலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதற்கிடையே, பிளஸ் 2 தனித்தேர்வு, இன்று துவங்குகிறது. 50 ஆயிரம் மாணவ, மாணவியர், இத்தேர்வை எழுதுகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.