Pages

Sunday, September 9, 2012

மாநில அளவிலான INSPIRE AWARD 2012 - 2013ஆம் கல்வியாண்டிற்கான விருதுகள் அறிவிப்பு - வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் இரண்டாவது முறையாக தங்கம் வென்று சாதனை!!!

2012-2013 ஆம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம், சென்னை புத்தாக்க அறிவியல் ஆய்வு விருதுக்கான  (INSPIRE AWARD) சிறந்த பள்ளியை தேர்ந்தெடுக்கும் மாநில அளவில் நடைபெற்ற கண்காட்சி கோயம்பத்தூரில் உள்ள கிருஷ்ணன் கல்லூரியில் 07 மற்றும் 08.09.2012 ஆகிய இரு நாட்கள்  நடைபெற்றது.  இதில் வேலூர் மாவட்டம், அணைகட்டு
ஒன்றியத்தை சார்ந்த  வரதலம்பட்டு, ஊ.ஒ.ந.நி.பள்ளி, 7ஆம் வகுப்பு  மாணவி A. R.நிரோஷா, காற்றில் கலக்கும் சிலிக்கான் துகள்களை ஜீன் மாற்றம் செய்யப்பட்டு தாவரங்கள் மூலம் ஊரிஞ்சுதல் என்ற தலைப்பில் தங்கம் வென்று   சாதனை படைத்தார். இதே பள்ளி மாணவர் தான் சென்ற முறை மாநில அளவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் INSPIRE AWARD வென்றுள்ளார்கள் என்பது மிகவும் வரவேற்க தகுந்த விஷயம்.   இந்த பெருமை அப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் திரு. அசோக் அவர்களின் வழிக்காட்டுதலும் மற்றும் சக ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும் தான் இவ்வெற்றியை பெற அடிப்படை காரணம் என மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர் .
மேலும் வேலூர் மாவட்டம், அணைகட்டு ஒன்றியத்தை சார்ந்த  கொட்டாவூர், ஊ.ஒ.ந.நி.பள்ளி, மாணவி A. காவியா  தொழிற்சாலை கழிவிலுள்ள கார்பன் கழிவுகளை வடிகட்டுதல்  என்ற தலைப்பில் வெள்ளி வென்று   சாதனை படைத்துள்ளார். இந்த பெருமை அப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர் திரு. ஸ்ரீதர் அவர்களின் வழிக்காட்டுதலும் மற்றும் சக ஆசிரியர்கள் அளித்த ஊக்கமும் தான் இவ்வெற்றியை பெற அடிப்படை காரணம் என மாணவிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
இச்சாதனை பெற்ற மாணவ செல்வங்களுக்கும் மற்றும் இவ்வெற்றியை பெற பாடுப்பட்ட ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

1 comment:

  1. superb and congratulation to golden girl and silver girl of anaicut block. my hearty wishes to ashok sir and sridhar sir.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.