Pages

Thursday, September 20, 2012

இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகம் விநியோகத்தை நேற்று அமைச்சர் துவக்கி வைத்தார்.

நடப்புக் கல்வியாண்டில், இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தக வினியோகத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, சென்னையில் நேற்று துவக்கி வைத்தார். இரண்டாம் பாடப் பருவத்திற்காக, மொத்தம், 56 தலைப்புகளில், 2.2 கோடி புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவக் கல்வி முறைத் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜூன் முதல், செப்டம்பர் வரையிலான முதல் பருவம், இம்மாத இறுதியுடன் முடிகிறது.

இதையடுத்து, அக்டோபர் முதல், டிசம்பர் வரையிலான இரண்டாம் பருவத்திற்கு, பாடப் புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணி, சென்னையில் நேற்று துவங்கியது. எழும்பூர், மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி, மாணவியருக்கு, பாடப் புத்தகங்களை வழங்கினார்.

எட்டாம் வகுப்பு வரையிலான மாணவியருக்கு, பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வகுப்பிற்கும், தலா இரு தொகுதிகள் அடங்கியதாக, பாடப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பருவத்திற்காக, 56 தலைப்புகளில், 2 .27 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு உள்ளன.

இதில், 1.52 கோடி பாடப் புத்தகங்கள், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. 75 லட்சம் பாடப் புத்தகங்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்காக அச்சிடப்பட்டு உள்ளன. இப்புத்தகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி, 15ம் தேதி முதல் நடந்து வருகிறது.

வரும் 25ம் தேதிக்குள், அனைத்துப் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் அனுப்பப்படும் என்றும், காலாண்டு விடுமுறை முடிந்து, அக்டோபர் 4ம் தேதி மாணவ, மாணவியர், பள்ளிகளுக்குத் திரும்பியதும், பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும், பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

முதல், இரண்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 70 ரூபாய், மூன்றாம் வகுப்பு முதல், ஆறாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை, 85 ரூபாய், ஏழு, எட்டாம் வகுப்புப் புத்தகங்களின் விலை, 100 ரூபாய்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.