தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியகளுக்கு, முதுகலை ஆசிரியருக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று தொழிற்கல்வி ஆசிரியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதன்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
• தொழிற்கல்வி ஆசிரியர்களை முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் என பெயர் மாற்றம் செய்து, முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் ஊதிய விகிதம் வழங்க வேண்டும்.
• 2007ல் பணிநியமனம் பெற்றும் இன்னும் ஊதியம் வழங்கப்படாத தொழிற்கல்வி ஆசிரியர் அனைவருக்கும் ஊதியம் வழங்க வேண்டும்.
• தொழிற்கல்வி ஆசிரியர்களை உதவி தலைமை ஆசிரியர்களாக நியமனம் செய்திட உரிய ஆணை வெளியிட வேண்டும்.
• உயர்கல்வி தகுதிகேற்ப ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.