பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பி, மாணவர்களின் எதிர்காலத்தை அரசு காக்க வேண்டும் என, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 2,488 மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இவற்றில் ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் 12 லட்சம் மாணவ, மாணவியருக்கு, உடற்கல்வி இயக்குனர் நிலை௨ சேர்ந்த 89 பேர் மட்டுமே உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், 250 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை இருந்தது. தற்போது, பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை உள்ளது. 12 முதல் 16 வயதுடைய, ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் பருவம் தான், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கக் கூடிய பருவம்.
இப்பருவத்தில் மாணவர்களை நெறிப்படுத்த, ஆசிரியர்கள் அவசியம் தேவை. இது குறித்து, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் - உடற்கல்வி இயக்குனர் சங்க பொதுச் செயலர் கூறுகையில், நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில், பல பிரிவுகளில் தகுதிச் சுற்றுக்கு கூட நம் வீரர்கள் தகுதி பெறாமல் போனதற்கு காரணம், பள்ளிகளில் முறையான விளையாட்டுப் பயிற்சிகள் இல்லாததே. அதற்கு போதிய விளையாட்டு ஆசிரியர்கள் இல்லாதது தான் காரணம் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.