மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் அகவிலைப்படி ஏழு சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நாளை வெளிவரும் என தெரிகிறது.
மத்திய அரசு ஊழியருக்கு, அடிப்படை சம்பளத்தில், 65 சதவீதம் அகவிலைப்படியாக தற் போது வழங்கப்படுகிறது. இதை 72 சதவீதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவையின் பரிந்துரைக்கு அனுப்பபட்டுள்ளது.
இதற்கு மத்திய அமைச்சரவை நாளை ஒப் புதல் அளிக்கும் என, தெரிகிறது. இந்த உயர்வு, கடந்த ஜூலை முதல் தேதியில் இருந்து, அமலுக்கு வரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர் பயன்பெறுவர். கடந்த மார்ச் மாதம், அகவிலைப்படி, 58 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக, மத்திய அரசு அதிகரித்தது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.