பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கு செல்லாமல் நீண்ட நாள் விடுமுறையில் இருந்து வந்த பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பஞ்சாப் மாநில அரசு ஆசிரியர்கள் நீண்ட நாள் விடுப்பு எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வர அனுமதியளித்து வருகிறது. இதனை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பாமல் இருப்பதை மாநில அரசு சமீபத்தில் கண்டறிந்தது.
இதனையடுத்து மாநிலம் முழுவதும் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தியது. இதி்ல் மாநிலம் முழுவதும் சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடர்ந்து இவர்கள் அனைவருக்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.