ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, வரும் 7, 8ம் தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜூலை 12ம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவு கடந்த 24ம் தேதி வெளியிடப்பட்டது. தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 8ம் தேதியும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெறுகிறது.
இதற்கான அழைப்புக் கடிதம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்திலும் அழைப்புக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த இணையதளத்தில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.