Pages

Sunday, September 16, 2012

முதுகலை ஆசிரியர் நியமனம்: 396 பேருக்கு உத்தரவு

மாநிலம் முழுவதும் நேற்று நடந்த முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வில், 396 பேர், உத்தரவுகளை பெற்றனர். மாநில பதிவு மூப்பு அடிப்படையில், 1,080 முதுகலை ஆசிரியர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, "ஆன்-லைன்&' வழியாக, மாவட்ட தலைநகரங்களில் உள்ள சி.இ.ஓ., அலுவலகங்களில் நேற்று நடந்தன.
சென்னை, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில், காலிப் பணியிடங்கள் இல்லை. இதர, 29 மாவட்ட தலைநகரங்களில், கலந்தாய்வு நடந்தது.

முதல் நாளான நேற்று, அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், 396 பேர், பணி நியமன உத்தரவுகளை பெற்றதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் தெரிவித்தார்.

ஒரு மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டத்தில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, திருச்சியில் இன்று நடக்கிறது. நியமன உத்தரவு பெறும், 1,080 பேரும், இம்மாதமே பணியில் சேர வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.