Pages

Friday, September 21, 2012

பிளஸ் 2 தனித்தேர்வு: தத்கால் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்


பிளஸ் 2 தனித்தேர்வு எழுதத் தவறியவர்கள், தத்கால் திட்டத்தில், இன்றும், நாளையும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு மையம் சென்னையில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளிக் கல்வித்துறையின் இணையதள முகவரியில், வழங்கப்பட்டுள்ள அறிவுரைப்படி, நாளை மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்-லைனில், பதிவிறக்கம் செய்யப்பட்ட, "சலான்&' மூலம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளைகளில், "அரசுத் தேர்வுகள் இயக்குனர், சென்னை - 6&' என்ற பெயரில், கட்டணம் செலுத்த வேண்டும்.

ஒரு பாடம் மட்டும் எழுதுவோர், ஒரு பாடத்திற்கு, 50 ரூபாய், இதர கட்டணம், 35 ரூபாய்; அனைத்துப் பாடங்களையும் எழுதுவோர், 187 ரூபாய், மற்றும், "தத்கால்&' திட்டத்திற்கு, 1,000 ரூபாயை, செப்டம்பர் 24ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பங்களை, உரிய இணைப்புகளுடன், செப்டம்பர் 28, 29ம் தேதிகளில், அரசுத் தேர்வுகள் இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, "ஹால் டிக்கெட்&' பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.