Pages

Thursday, September 6, 2012

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட, 268 பள்ளி கட்டடங்கள், கல்லூரி கட்டடங்கள் மற்றும் வகுப்பறை கட்டடங்கள் முதல்வர் திறந்தார்!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட, 268 பள்ளி கட்டடங்கள், கல்லூரி கட்டடங்கள் மற்றும் வகுப்பறை கட்டடங்கள், முதியோர் இல்லங்களை, முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில், வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டத்தில், 11; ஈரோடு, 7; வேலூர், 24; நீலகிரி, 1; கோவை, 5; காஞ்சிபுரம், 14; கடலூர், 12; திருவண்ணாமலை, 36; புதுக்கோட்டை, 16; விருதுநகர், 22 பள்ளிக் கட்டடங்கள் உட்பட, 268 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கட்டடங்கள், அதன் உட்பிரிவுகள். மாவட்டத்திற்கு இரண்டு வீதம், 64 இடங்களில், முதியோர்கள், ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்களை உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த வளாகங்களை, "வீடியோ கான்பரன்சிங்" மூலம், முதல்வர் திறந்து வைத்தார்.

ஒவ்வொரு ஒருங்கிணைந்த வளாகத்திலும், தலா, 25 ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் தங்கி பயன்பெறுவர். கல்லூரிகள், கட்டடங்கள் தேனி மாவட்டம், போடியில் துவக்கப்பட்டுள்ள, புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு தேவையான கட்டடங்கள், உபகரணங்கள், ஆசிரியர் நியமனம், விடுதி, நூலகம், ஆய்வுக் கூடங்கள் அமைக்க, 93.64 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடலூரில் பண்ருட்டி, தஞ்சையில் ராஜாமடம், கன்னியாகுமரியில் கோணம் ஆகிய இடங்களில், அண்ணா பல்கலை உறுப்பு பொறியியல் கல்லூரிகள் மற்றும் கோவை, அரசு தொழில் நுட்பக் கல்லூரி ஆகியவற்றிற்கு, 60.15 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், பெரம்பலூர் கீழக்கணவாய், மதுரையில் அம்பலக்காரன்பட்டி, தேனியில் கோட்டூர், திருவாரூரில் கொற்கை, கிருஷ்ணகிரியில் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு, 29.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், வகுப்பறை கட்டடங்கள் சென்னை, மாநிலக் கல்லூரி, பாரதி மகளிர் கல்லூரி; ராமநாதபுரம் அரசு மகளிர் கலைக் கல்லூரி; கோவை அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி; தஞ்சாவூர், ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரி உட்பட, பல கல்லூரிகளில், 12.86 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், நூலகங்கள், மாணவியர் விடுதி. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில், 8.12 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் என, மொத்தம், 110.57 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, "வீடியோ கான்பரன்சிங்" மூலம், முதல்வர் திறந்து வைத்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.