Pages

Thursday, September 27, 2012

பிளஸ் 2 தனி தேர்வு: 28ல் ஹால் டிக்கெட்

பிளஸ் 2, தனி தேர்வருக்கு, நாளை முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தேர்வு துறை அறிவிப்பு: அக்டோபரில், பிளஸ் 2 தனி தேர்வு நடக்கிறது. இதற்கு, இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, நாளை முதல், அக்., 1ம் தேதி வரை, ஞாயிறு தவிர, மற்ற நாட்களில், ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், குறிப்பிட்ட மையத்தில், ஹால் டிக்கெட் வழங்கப்படும்.
மாணவ, மாணவியர், ஹால் டிக்கெட்டை பெற்றதும், அதில் உள்ள விவரங்களை சரிபார்த்து, பிழைகள் இருப்பின், உடனே, தேர்வுத் துறையை அணுகலாம். இவ்வாறு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.