Pages

Saturday, September 15, 2012

அக்டோபரில் நடைபெறும் அரசுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்

மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஒ.எஸ்.எல்.சி. (பழைய பாடத் திட்டம்) ஆகியவற்றுக்கு வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும்.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் சு. லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் முறை கடைபிடிக்கப்படவில்லை.

 மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள்ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் இதற்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

 மெட்ரிக் தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திருச்சி, காஜா நகர், அரபிக் கல்லூரி தெருவில் உள்ள அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

 ஆங்கிலோ இந்தியன் தேர்வர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மண்டல துணை இயக்குநர், அரசுத் தேர்வுகள், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை -6 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 ஒ.எஸ்.எல்.சி. தேர்வர்கள் விண்ணப்பிக்க இடைநிலைக் கல்விப் பொதுத் தேர்வுக்குப் இதுவரைப் பயன்படுத்தப்பட்டு வந்த வெற்று விண்ணப்பங்களை திருச்சி அரசுத்தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகத்திலிருந்து பெற்று, பூர்த்தி செய்து உரிய உள்ளடக்கங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

 அனைத்துத் தேர்வர்களுக்கும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க செப்.18-ம் தேதி கடைசி நாளாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.