வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவக்குமார், லோகேஷ், கார்த்திகேயன், பகுத்தறிவன் உள்பட 14 பேர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது :- சர்வ சிக்சா அபியான் என்ற திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2011-12-ம் கல்வி ஆண்டுக்கு மாநிலம் முழுவதும் 16,549 பேர் தேர்வாகி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் 1093 பேர் தேர்வாகி பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.
எனவே இந்த நியமனத்தை சட்ட விரோதம் என்று அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி நாகமுத்து கூறியதாவது:-
இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு கூறுவதற்கு முன்பு வேலைக்கு தேர்வானவர் களுக்கு உரிய வாய்ப்பு கொடுக்க வேண்டும். எனவே இந்த வழக்கு குறித்த விவரத்தை மனுதாரர்கள் வேலூர் மாவட்ட பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிட வேண்டும்.
வழக்கு விசாரணை வரும் 28-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அன்றைய தினம் வேலூர் மாவட்டத்தில் தேர்வான 1093 பகுதி நேர ஆசிரியர்கள் கோர்ட்டில் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி நாகமுத்து உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.