Pages

Wednesday, August 15, 2012

இரட்டை பட்டம் செல்லாது, இடைக்கால தீர்ப்பு சரியானது என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவு.


    இரட்டை பட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த  இடைநிலை ஆசிரியர்கள்  தனித்தனியாகவும் மற்றும் குழுவாகவும் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரட்டைப் பட்டம் சார்பாக நீதிமன்றம் அளித்த இடைக்கால தீர்ப்பை தள்ளுபடி செய்யவும் இடைக்கால தீர்ப்பின் மீதான தடையை நீக்க கோரி நூற்றுக்கணக்கான  வழக்குகள் தொடுத்திருந்தனர்.

   வழக்கு மீதான விசாரணை கடந்த வாரத்தில் முடிந்த நிலையில் மாண்புமிகு நீதியரசர் இராமசுப்பிரமணியன் 14.08.2012 அன்றைய தனது தீர்ப்பில் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க விதித்திருந்த இடைக்கால தீர்ப்பு சரியானது எனவும் மேலும் இரட்டைப் பட்டங்களுக்கு ஆதரவாக தொடரப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாகவும்  தனது தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார்.    இதனால் இரட்டை பட்டம் பயின்றவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காதது மட்டுமல்லாமல் பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் கேட்ட போது இது குறித்த முழமையான விவரங்கள் தீர்ப்பு நகல் கிடைத்தப்பிறகு தான் கூற முடியும் என்றும் தீர்ப்பில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பது அப்போது தான் கூற முடியும் என்றும் தீர்ப்பு நகல் அடுத்த வாரத்தில் கிடைக்கப் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எனினும் இத்தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய போவதாகவும் தெரிவித்தார்.

8 comments:

  1. In the past time double degree eligible for new recruitment and also promotion now why this confusion?

    ReplyDelete
    Replies
    1. Dear friend Bcoz some of TRs went to the Court, thats y raised this issue. Pls wait till the final order. We will update the status. thanking u..

      Delete
  2. whether the double degree is eligible for new recruitment????

    ReplyDelete
    Replies
    1. Dear Nithya now it is fully depended based on Court Judgement, so pls wait till for the Proper Order Copy. After getting the order, we will update the status as soon as possible... thanking u

      Delete
  3. properly studied teachers will get promotion.only one year teacher got promotion,its a wrongly way.

    ReplyDelete
    Replies
    1. dear kumaran,we have studied four(3+1) year. after we get double degree.It is not one year course.

      Delete
  4. Dear Nithya now it is fully depended based on Court Judgement, so pls wait till for the Proper Order Copy. After getting the order, we will update the status as soon as possible... thanking u

    ReplyDelete
  5. nan BBA(ca),mudichuten,ippa distance education la BA(engl)2year padikaren.ippa b p'ed padikalama????

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.